தாட்சாயிணி

From Wikipedia, the free encyclopedia

தாட்சாயிணி
Remove ads

தாட்சாயிணி (Dakshayani அல்லது Sati) என்பவர் சிவபெருமானின் மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த ஆதி சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார். இவர் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். இவரை பவானியென சிவமகாபுராணம் கூறுகிறது.[1] பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரஜாபதி தட்சனுக்கும், முதல் மனிதர்களான சுவாயம்பு மனு மற்றும் சதரூபை தம்பதிகளின் மகளான பிரசூதி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். அதனால் பிரம்மாவின் பேத்தியாக கருதப்படுகிறார்.

Thumb
தட்சனின் யாகத்தில் வீழ்ந்து இறந்த தாட்சாயினியின் உடலை தாங்கி நிற்கும் சிவபெருமான், தட்ச மகாதேவர் கோயில், அரித்துவார், உத்தராகண்ட், இந்தியா

சிவபெருமானிடம் இருந்த வன்மம் காரணமாக பிரஜாபதி தட்சன் சதி சிவபெருமான் திருமணத்திற்குப் பிறகு பெரும் யாகமொன்றினை நடத்துகிறார். அந்த யாகத்திற்கு சிவபெருமானுக்கு தாட்சாயிணிக்கும் அழைப்பு அனுப்பாமல் இருக்கிறார். தந்தையின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக தட்சனின் யாகத்திற்கு வந்த தாட்சாயிணி அவமானங்களை சந்திக்கின்றார். அத்துடன் தன்னுடைய கணவரான சிவபெருமானை தட்சன் அவமதித்தை தொடர்ந்து அந்த யாகத்தில் விழுந்து மறிக்கின்றார். அதனையறிந்த சிவபெருமான் வீரபத்திரனை தோற்றுவத்து தட்சனை கொல்லும் படி உத்தரவிடுகிறார். தாட்சாயிணியின் உடலை எடுத்துக் கொண்டு நிலையின்றி சிவபெருமான் அலைவதைக் கண்ட திருமால் தாட்சாயிணியின் உடலை சக்கராயுதத்தினால் தகர்க்கின்றார். அதனால் தாட்சாயிணியின் உடல்கள் பல பகுதிகளாக சிதருண்டு பூலோகத்தில் பல இடங்களில் விழுகின்றது. இவ்வாறு விழுந்த இடங்களை சிவபெருமான் சக்தி பீடங்களாக மாற்றி மக்களின் வழிபாட்டிற்கும், அந்த இடங்களுக்கு காவலாகவும் பைரவர்களை தோற்றுவிக்கின்றார்.

Remove ads

சக்தியே மகளாக

Thumb
சிவதாட்சாயிணி குடும்பம்

உலகம் பராசக்தியால் இயங்குகிறது என்பதை பிரம்மாவின் மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெருவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு கட்டுப்பட்டவளாக இருப்பாள் என்பதால் பெரும்சக்தி தனக்கு கிடைக்குமென நினைத்தார். அவருடைய வரத்தினால் பராசக்தியே சதி என்கிற தாட்சாயினியாக பிறந்தார்.

சிவபெருமான் சதி திருமணம்

Thumb
தாட்சாயினி

தட்சனின் மகளான சதி சிவபெருமான் மீது காதல் கொண்டார். சிவபெருமானை நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் கிடைக்கப்பெரும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

தந்தையின் சினம்

Thumb
தட்சனின் யாகத்தில் சதி

தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், கடவுளர்களையும் தட்சன் அழைத்தார்.

இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன்தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.

இதனால் சிவபெருமான் ருத்திரனாக அவதாரம் எடுத்து தட்சனை அழித்தார். அவருடன் பைரவர், காளி, வீரபத்திரர் ஆகியோர் யாகத்தினை அழித்தாக கூறப்படுகிறது.[2]

மரபுரிமை பேறுகள்

விஜய் தொலைக்காட்சியில் தாட்சாயினி - சிவபெருமான் தொடர்பான தொடர் 2017ல் வெளிவந்தது.[3]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads