தானிசு இந்தியா

From Wikipedia, the free encyclopedia

தானிசு இந்தியா
Remove ads

தானிசு இந்தியா (Danish India) டென்மார்க்கின், (1814 வரை டென்மார்க்-நோர்வே) முன்னாள் இந்தியக் குடியேற்றங்களைக் குறிப்பதாகும். இவை தற்போதையத் தமிழ்நாட்டிலிலுள்ள தரங்கம்பாடி (Tranquebar), தற்போதைய மேற்கு வங்காளத்தின் செராம்பூர் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள் மைய ஆட்சிப்பகுதியில் உள்ள நிக்கோபார் தீவுகள் உள்ளிட்டவையாகும்.[1][2][3]

Thumb
1620இல் கட்டபட்ட தான்சுபோர்கு கோட்டை, தரங்கம்பாடி
விரைவான உண்மைகள் தானிசு இந்தியாDansk Ostindien, நிலை ...

இந்தியாவின் டேனிஷ் குடியேற்றபகுதிகளை 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டு வரை செயலில் இருந்த டென்மார்க் கிழக்கிந்தியக் கம்பனி நிறுவியது. இந்தக் குடியேற்றங்களின் தலைநகராக 1620 இல் கோரமண்டல் கடற்கரையில் உள்ள தரங்கம்பாடியில் கட்டப்பட்ட டான்சுபோர்கு கோட்டை விளங்கியது.

தானிசுக்காரர்கள் பல வணிக புறமையங்களை நிறுவி தரங்கம்பாடியிலிருந்து ஆண்டனர்:

1777ஆம் ஆண்டில் இபகுதிகளை தானிசுக் கம்பனி அரசிடம் ஒப்படைக்க இவை தானிசு மன்னராட்சி் குடியேற்றங்களாயின.

1789 ஆம் ஆண்டு அந்தமான் தீவுகள் பிரித்தானியக் குடியேற்றமானது. நெபோலியப் போர்களின் போது ஐக்கிய இராச்சியம் தானிசு கடல்வணிகத்தை தாக்கி இந்தியாவிலிருந்த தானிசுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு மிகுந்த நட்டத்தை உண்டாக்கியது. மே 1801 - ஆகத்து 1802 மற்றும் 1808 - செப்டம்பர் 20, 1815 காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் தரங்கம்பாடி மற்றும் பிரெடிரிக்சுநகர் கோட்டைகளைப் பிடித்து தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தனர்.

மெதுவாக தானிசுக் குடியேற்றங்கள் வலுவிழந்து பிரித்தானிய இந்தியாவின் பகுதிகளாயின: 1839ஆம் ஆண்டில் செராம்பூர் பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது, 1845இல் தரங்கம்பாடியும் பெரும்பாலான சிறு குடியேற்றங்களும் விற்கப்பட்டன. 1868 அக்டோபரில், 1848இலிருந்தே புறக்கணிக்கப்பட்டிருந்த, நிக்கோபார் தீவுகளும் பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads