தாம்பரம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாம்பரம் தொடருந்து நிலையம் (Tambaram railway station, நிலையக் குறியீடு: TBM) சென்னை தாம்பரத்தில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை புறநகர்க்கான சென்னைக் கடற்கரை - தாம்பரம் இரயில்வே வலையமைப்பின் முக்கிய முனையங்களில் ஒன்றாகும். இது தாம்பரம், சென்னை புறநகர் பகுதியான மையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் சென்னை நகர மையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் தெற்கே அமைந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 3,50,000 பேர் இந்தத் தொடருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். சுமார் 280 புறநகர் மின்சார ரயில்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படுகின்றன.[2][3]
Remove ads
வரலாறு

தாம்பரம் தொடருந்து நிலையமே சென்னையில் முதன் முதலாக மின்மயமாக்கப்பட்ட தொடருந்து நிலையமாகும். சென்னை கடற்கரை - தாம்பரம் பகுதி மின்சாரம் கொண்டு 1931ஆம் ஆண்டில் 1.5 கிலோ வோல்ட் டிசி மூலம் சக்தியூட்டப்பட்டது. மூன்றாவது லைனானது 15 சனவரி 1965-ல் மின்மயமாக்கப்பட்டது. தெற்கில் செங்கல்பட்டு வரை 9 சனவரி மாதம் மின்மயமாக்கப்பட்டது. மேலும் 15 சனவரி 1967-ல் அனைத்தும் 25 கிலோ வோல்டாக மாற்றப்பட்டது. [1]
Remove ads
போக்குவரத்து
ஒவ்வொரு நாளும் 160 தொடருந்துகள், சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்திலும், 70 தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்திலும், 16 தாம்பரம் - காஞ்சிபுரம் இடையேயும் இயக்கப்படுகின்றன.[4] தாம்பரம் நிலையத்தில் பயணச்சீட்டு விற்பனை, புறநகர் நிலையங்களைக் காட்டிலும் மிக அதிகமாகும்.[5] 2013 வரை, சுமார் 20,000 மக்கள், தினசரி, தாம்பரம் தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டு வாங்கியுள்ளனர்.[6]
பாதுகாப்பு
2011ஆம் ஆண்டு முதல் மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி (CCTV) கேமராக்கள், கதவை சட்ட உலோகத்தை கண்டறியும் கருவிகள், சாமான்களை சல்லடை போடும் சாதனங்கள் போன்றவை 4 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளன.
விபத்து விகிதங்கள்
17 நிலையங்களை உள்ளடக்கிய கிண்டி - செங்கல்பட்டு புறநகர் பிரிவில், குரோம்பேட்டை - தாம்பரம் வரையிலான தொடருந்து பாதையில், ஒரு மாதத்திற்கு சுமார் குறைந்தது 15 விபத்துக்கள் நிகழ்கின்றன.
தொடருந்து நேரங்கள்
தாம்பரத்தில் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடருந்து வசதி உள்ளது. ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் சென்னைக் கடற்கரை முதல் தாம்பரம் வரை புறநகர் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் செங்கல்பட்டு முதல் சென்னைக் கடற்கரை வரை தொடருந்துகள் செல்கின்றன. காலையிலும் மற்றும் மாலையிலும், நிலையம், அலுவலகப் பணியாளர்களால் நிறைந்து காணப்படும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads