தாயக மறுமலர்ச்சி கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாயக மறுமலர்ச்சி கழகம் (Thayaga Marumalarchi Kazhagam) என்பது தமிழ்த் திரைப்பட நடிகர் டி. ராஜேந்தரால் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சியை ராஜேந்தர் 1991 ஆம் ஆண்டு தொடங்கினார். 1991 சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்ட இக்கட்சி 2 இடங்களில் வென்றது. 1996இல் ராஜேந்தர் இக்கட்சியைக் கலைத்து விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார். பின்னர் 2004இல் திமுகவை விட்டு வெளியேறி அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.[1][2][3](2 இடங்களில் திருநாவுக்கரசரும், கூட்டணி அண்ணா புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் வெற்றி பெற்றனர்)

டி. ராஜேந்தர் தி.மு.க.வில் இருந்த போது கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். தி.மு.க சார்பாக போட்டியிட்டு ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் அவரது இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம், ஆட்சியில் இருந்த தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த போது, சிறுசேமிப்புத் துறை தலைவராக நியமிக்கப்பட்டார்.அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் ஏப்ரல் 2004ல் நடிகர் டி. ராஜேந்தரால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும்.[4] இந்தக் கட்சியின் கொடியில் காணப்பட்ட நிறங்கள் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் ஆகும். இக்கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற கட்சியாகும். 2013-இல் கருணாநிதியைச் சந்தித்தபோது இது கலைக்கப்பட்டது என ராஜேந்திரர் அறிவிக்க, அவரை கட்சியை விட்டு வெளியேற்றி கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 2016-இல் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடிதம் எழுதினார். அதில் இலட்சிய திமுக என்று லெட்டர் பேடில் மாற்றியிருந்தார். பிப்ரவரி 18, 2018-இல் மீண்டும் இதை இலதிமுகவாக தொடங்கினார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாததால் 2022 செப்டம்பரில் இக்கட்சியின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் இரத்து செய்தது.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads