டி. ராஜேந்தர்
தமிழ்த் திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடிகர், From Wikipedia, the free encyclopedia
Remove ads
டி. ராஜேந்தர் (T. Rajendar, பிறப்பு: 9 மே 1955) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழ்நாடு அரசியல்வாதியும் ஆவார்.[2] வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தனது பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.
Remove ads
அரசியல் வாழ்க்கை
திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியைத் துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனைக் குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவிலிருந்து விலகி 1991-இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியையும் 2004-இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.[3][4]
Remove ads
திரைப்படப் பட்டியல்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads