தாரங்கதாரா இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

தாரங்கதாரா இராச்சியம்
Remove ads

தாரங்கதாரா இராச்சியம் (Dhrangadhra State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் தாரங்கதாரா நகரம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள்


Remove ads

வரலாறு

தாரங்கதாரா இராச்சியத்தை 1090-இல் இராஜபுத்திர குல ஆட்சியாளர் ஹர்பால் தேவ் மக்வானா என்பர், தில்லி சுல்தானகத்தை எதிர்த்து, ஜாலாவாத் எனும் பெயரில் நிறுவினார். 1742-இல் தாரகதாரா எனும் புதிய நகரம் நிறுவப்பட்டது. [2][3]1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற தாரங்கதாரா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

Remove ads

ஆட்சியாளர்கள்

Raj Sahibs of Dhrangadhra

Thumb
தாரங்கதாரா இராச்சிய மன்னர் மான் சிங், ஆண்டு 1870
  • இரண்டாம் ராய் சிங் பிரதாப் சிங்
  • கஜ்சி இரண்டாம் ராய்சி (பிறப்பு:1744?45 - இறப்பு: 1782)
  • ஜஸ்வந்த் சிங் இரண்டாம் கஜ் சிங் ( - இறப்பு: 1801)
  • இராணி ஜிஜிபாய் குன்வெர்பா - 1758 - 1782
  • ராய் சிங் மூன்றாம் ஜஸ்வந்த் சிங் (இறப்பு: 1804
  • அமர்சிங் இரண்டாம் ராய்சிங் (இறப்பு: 9 ஏப்ரல் 1843
  • ரண்மால் சிங் அமர்சி ராஜா சாகிப் ( 9 ஏப்ரல் 1843 – death 16 அக்டோபர் 1869
  • மான்சிங் இரண்டாம் ரண்மால் சிங் (பிறப்பு:16 அக்டோபர் 1869 - இறப்பு: 2 டிசம்பர் 1900
  • 2 டிசம்பர் 1900 - 8 பிப்ரவரி 1911 அஜித் சிங் ஜஸ்வந்த் சிங்
  • 8 பிப்ரவரி 1911 - 4 பிப்ரவரி 1942 கண்சியாம் சிங் அஜித் சிங் (பிறப்பு:. 1889 - இறப்பு: 1942)
  • 4 பிப்ரவரி 1942 – 15 ஆகஸ்டு 1947 மயூர்துவஜ சிங் (மூன்றாம் மேகராஜ்) (பிறப்பு:. 1923 - இறப்பு:. 2010)[4]
Remove ads

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads