தாரு மக்கள்
இந்தியப் பழங்குடிகள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாரு மக்கள் (Tharu people) நேபாள நாட்டின் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்த தராய் பகுதியில் அதிகமாக வாழும் இன மக்கள் ஆவார். [3][4][5][6] தாரு மக்கள், இந்தியாவின் கிழக்கு உத்தரகாண்ட், வடக்கு உத்தரப் பிரதேசம், வடக்கு பிகார் மாநிலங்களிலும் வாழ்கின்றனர். [7][8][9]
தாரு இன மக்களை, தேசிய இனங்களில் ஒன்றாக நேபாள அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. [10] இந்தியாவில் தாரு மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது. [7]
Remove ads
வரலாறு
வாய் வழி செய்திகளின் படி, ராணா தாரு மக்கள், இராஜஸ்தானின் தார் பாலைவனத்தின் இராசபுத்திரர்கள் புலம்பெயர்ந்து, கிழக்கு உத்தரகாண்ட், வடக்கு உத்தரப் பிரதேசம், வடக்கு பிகார் மற்றும் நேபாளத்தின் தராய் சமவெளிகளில் குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள் எனக்கருதப்படுகின்றனர்.
வேறு சில வரலாற்று ஆய்வாளர்கள், தாரு மக்கள், கபிலவஸ்துவில் வாழ்ந்த சாக்கியர் மற்றும் கோலியர் குலங்களின் வழித்தோன்றல்கள் எனக் கருதுகின்றனர்.[11]
நவீன வரலாற்றில் (1700 -1999)
பதினெட்டாம் நூற்றாண்டில், ஒன்றிணைந்த நேபாள இராச்சியம் நிறுவப்படும் வரையில் தாரு மக்கள், குடும்பம் குடும்பமாக கொத்தடிமைகளாக தராய் சமவெளிகளில் வாழ்ந்தனர்.[12]நேபாளத்தில் 1854ல் ராணா வம்ச ஆட்சியில், மது அருந்தும் தாரு மக்களை தீண்டத்தகாதவர் என அறிவிக்கப்பட்டது. [13][14]
மேற்கு தராய் பகுதியில் வாழ்ந்த தாரு மக்களின் விளைநிலங்களை, அங்கு குடியேறிவர்கள் வாங்கி, தாரு மக்களை கொத்தடிமைகளாக நடத்தினர்.[6]
சித்வான் தேசியப் பூங்காவை அமைக்கும் போது, அப்பகுதிகளில் வாழ்ந்த தாரு மக்களை வலுக்கட்டாயமாக வேறு இடங்களுக்கு வெளியேற்றினர். [5]
அன்மைய வரலாறு (2000 முதல் - தற்போது வரை)
சூலை, 2000ஆம் ஆண்டில் நேபாள ஜனநாயக ஆட்சி முறை கொண்டுவரப்பட்டு, கொத்தடிமை முறையை சட்டவிரோதமாக செயல் அறிவித்த போதிலும், [15] தாரு மக்கள் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின் தங்கிய சமூகத்தினராகவே உள்ளனர். [16]
Remove ads
மக்கள் தொகையியல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில், தாரு மக்களின் மக்கள் தொகை 17,37,470 ஆக உள்ளது. இது நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையில் 6.6% ஆகும். [1]
புறமணத்தடை பயிலும் தாரு மக்களின் உட்கிளைகள், தராய் சமவெளியில் சிதறி வாழ்கின்றனர். [17][5]
பண்பாடு


தாரு மக்கள் தங்களை காட்டு மக்கள் என அழைத்துக் கொள்கின்றனர். இவர்கள் காடுகளில் நெல், ஆமணக்கு, சோளம், பயறு, மூலிகைச் செடிகள், காய்-கனிகளைப் பயிரிடுவதுடன் தேன் சேகரிப்பையும் செய்கின்றனர். மேலும் மான், முயல் மற்றும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடி வாழ்கின்றனர். [5]
மொழிகள்
நேபாள-இந்திய எல்லைப்புறங்களில் வாழும் தாரு மக்கள், அவதி, போஜ்புரி, மைதிலி இந்தி மற்றும் உருது கலந்த தாரு மொழியின் பல வட்டார வழக்கு மொழிகள் மற்றும் நேபாளி மொழியும் பேசுகின்றனர். [6]
உணவு
- தாரு மக்களின் மீன் கருவாடு
- அரிசி மூலம் காய்ச்சிய சாராயம்
- திக்காரி; தாரு மக்களின் உணவு
- மிளகாயுடன் வேக வைத்த சோளக் கட்டை
சமயம்
தாரு மக்கள் இயற்கையையும், பல தெய்வ வழிபாடு கொண்டவர்கள். இருப்பினும் இந்து மற்றும் பௌத்த சமயங்களையும் பின்பற்றுகின்றனர். [5]
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads