கபிலவஸ்து (பண்டைய நகரம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கபிலவஸ்து (Kapilavastu) கௌதம புத்தர் பிறந்த சாக்கிய குலத்தவர்களின் நகரம் ஆகும். தற்போது பண்டைய கபிலவஸ்து நகரம், இந்தியாவில் உள்ள பிப்ரவா எனும் கிராம அளவில் சுருங்கி விட்டது. பிப்ரவா கிராமம், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சித்தார்த்தநகர் மாவட்டத்தில் உள்ள பன்சி தாலுகாவில் உள்ளது. சித்தார்த்தநகர் மாவட்டத் தலைநகரமான நௌகருக்கு வடக்கே 22 கி.மீ. தொலைவில் பிப்ரவா கிராமம் உள்ளது.


Remove ads
வரலாறு
புத்தரின் தந்தை சுத்தோதனர் - தாய் மாயா வாழ்ந்த நகரம் ஆகும். புத்தர் தமது 29-ஆவது அகவையில், மனைவி யசோதரை, மகன் ராகுலனை அரண்மனையில் விட்டகன்று, துறவறம் மேற்கொள்ளும் வரை கபிலவஸ்துவின் அரண்மனையில் வாழ்ந்தவர்.[2]
சீன நாட்டு பௌத்தப் பிக்குகளான பாசியான் மற்றும் யுவான் சுவாங் ஆகியோர் கபிலவஸ்து நகரத்திற்கு புனித யாத்திரையாக வந்துள்ளனர்.[3][4][5][6]
அகழ்வாராய்ச்சிகள்
19-ஆம் நூற்றாண்டின் வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சித்தார்த் மாவட்டத்தின் வடக்கில் இந்திய-நேபாள எல்லைப்புறத்தில் உள்ள பிப்ரவா கிராமத்தில் அகழாய்வின் போது தூபியும், விகாரையும் கிடைத்துள்ளதால், இக்கிராமமே கௌதம புத்தர் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம் என்றும், மற்றொரு பிரிவினர், பண்டைய கபிலவஸ்து நகரம், இந்தியா - நேபாள எல்லையில், நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள திலௌராகோட் எனுமிடத்திலிருந்து வடமேற்கே பத்து மைல் தொலைவில் உள்ளதென்றும் கூறுகின்றனர்.[7][8] [9][10][11][12]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads