தாழம்பூ (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாழம்பூ என்பது விஜய் தொலைக்காட்சியில் 7 அக்டோபர் 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி 60 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற மீயியற்கை மற்றும் கற்பனைத் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1]
இந்த தொடரில் அவளும் நானும் தொடரில் நடித்த அம்ருத் மனித உருவில் உலகைத் தேடி வரும் புதிய உயிரினம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக திரைப்பட நடிகை சாந்தினி தமிழரசன் ரேவதி என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் தறி தொடரில் நடித்த அங்கனா ராய் நாகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ராஜீவ் மேனன் உதவியாளர் சண்முகம் இத் தொடரை இயக்கியுள்ளார்.[2]
Remove ads
கதைச்சுருக்கம்
இந்த தொடரின் கதை கடலுக்கு அடியில் இருக்கும் பாம்புகளின் உலகம் நாகலோகம் மற்றும் மற்றும் மனிதர்கள் வாழும் மனிதலோகத்தை பற்றிய கதையாகும். நாகலோகத்தின் தலைவரின் மகளான வாசுகிக்கும் நாகலோகத்தின் இளம் போர்வீரன் நாகாவும் நிச்சயம் ஆனவர்கள். நாகலோகத்து பெரியவர்கள் செய்த தவறால் அவர்களது பொக்கிஷமான ஆத்மலிங்கம் நாகலோகத்தில் இருந்து தொலைந்து விடுகிறது. ஆத்மலிங்கம் இல்லை என்றால் அவர்களது சக்திகள் முழுமை பெறாது. அவர்களது உலகமே அழியும் நிலை ஏற்பட்டுவிடும். அந்த நிலையில் ஆத்மலிங்கத்தை மீட்டெடுக்க நாகா, பூலோகம் வருகிறான்.
பூலோகத்தில் ஆத்மலிங்கத்தை பாதுகாத்து பூஜித்து வரும் ரேவதி குடும்பத்தினர். அவர்களிடமிருந்து ஆத்மலிங்கத்தை மீட்டெடுக்கும் நோக்கில் நாகா மானிடனாக உருமாறி பூலோகம் வந்து ரேவதியிடம் நெருங்கிப் பழகுகிறான். ரேவதி, நாகாவை காதலிக்கிறாள். அதே தருணம் ஆத்மலிங்கத்தை அபகரிக்க துடிக்கும் கருடன். ரேவதிக்கு நாகா மனிதன் அல்ல பாம்பு என்று தெரிய வருகின்றதா? ஆத்மலிங்கத்தை காப்பாற்றுகிறாளா?, காதலிக்காக எங்கும் வாசுகியின் நிலைமை என்ன? என்பதுதான் இத் தொடரின் கதை.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- சாந்தினி தமிழரசன்[3] - ரேவதி
- பூலோகத்தை சேர்ந்த இளம் பெண். குடும்பத்தில் எல்லோருக்கும் செல்ல மகள். ஆத்மலிங்கத்தை பாதுகாப்பவள்.
- அம்ருத் - நாகா
- நாகலோகத்தை சேர்ந்த இளம் போர்வீரர் மற்றும் வாசுகியின் காதலன்.
- அங்கனா ராய் - வாசுகி
- நாகலோகத்தின் தலைவரின் மகள். நாகாவுடன் நிச்சயம் ஆனவர்.
துணை கதாபாத்திரம்
- லோகேஷ் - ஜெகன்
- அக்ஷிதா - சாரு
- யுவன்ராஜ் நேத்ரன் - பாக்கியநாதன்
- கிருத்திகா - தனம்
- ஷர்மிளா - தேவகி
- ரக்ஷன்
- அப்சர் பாபு
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads