தினகரன் (இந்தியா)

தமிழகத்தில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தினகரன் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்புச் சேவையை நடத்திவரும் சன் குழுமத்தினால் வெளியிடப்படும் இந்த நாளிதழ், ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன் என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 இலட்சம் பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது. [சான்று தேவை]

விரைவான உண்மைகள் வகை, வடிவம் ...

தினகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தினத்தந்தியின் நிறுவனர் சி. பா. ஆதித்தனார் மருமகனுமான கே. பி. கந்தசாமியால்[1] தொடங்கப்பட்டது. பின்னர் 2005 [சான்று தேவை]ஆம் ஆண்டிலிருந்து திமுக வின் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனான கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமம் இதனை விலைக்கு வாங்கி, நடத்தத் தொடங்கியது.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads