தியோ நாராயண் யாதவ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

தியோ நாராயண் யாதவ் (Deo Narayan Yadav)(இறப்பு 4 மார்ச், 2003) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். இவர் 1952-1957 மற்றும் 1957-1962-ல் பீகாரில் லதானியா சட்டமன்றத் தொகுதியிலிருந்து (இப்போது பாபுபர்ஹி தொகுதி) சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருட்டிணா சின்கா தலைமையிலான பீகாரின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.[2] யாதவ் 1995-2000 வரை பீகார் சட்டமன்றத்தின் 12வது சபாநாயகராக பணியாற்றினார். இவர் 1977-1980 மற்றும் 1990-இறப்பு வரை மதுபானியில் உள்ள பாபுபர்ஹி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். யாதவ் 2003ஆம் ஆண்டு மார்ச்சு 4 செவ்வாய்க் கிழமையன்று தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் காலமானார். 82 வயதான மற்றும் மதுபானியில் உள்ள பாபுபர்ஹி சட்டமன்றத் தொகுதியின் இராச்டிரிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினரின் திடீர் மறைவுக்கு பீகார் ஆளுநர் வி. சி. பாண்டே, சட்டசபை சபாநாயகர் சதானந்த் சிங், பீகார் சட்டப் பேரவைத் தலைவர் பேராசிரியர். ஜாபிர் உசேன், முதல்வர் ராப்ரி தேவி, ஆர். ஜே. டி. மேலிடத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இரங்கலையும் அதிர்ச்சியையும் தெரிவித்தனர்.

விரைவான உண்மைகள் தியோ நாராயண் யாதவ், முன்னையவர் ...
Remove ads

நினைவு

  • தேவ் நாராயண் யாதவ் நினைவாக கல்லூரி ஒன்று செயல்படுகிறது

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads