லாலு பிரசாத் யாதவ்

பீகாரின் 20ஆவது முதலமைச்சர் From Wikipedia, the free encyclopedia

லாலு பிரசாத் யாதவ்
Remove ads

லாலு பிரசாத் யாதவ் (இந்தி: लालू प्रसाद यादव, பி. ஜூன் 11, 1948) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். 4ஆம் மக்களவையில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் இராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.லாலு பிரசாத் யாதவ் வழக்கின் மூலம் தன் முதல்வர் பதவியை இழக்க நேரிட்ட போது அவரின் மனைவியான ராப்ரி தேவியை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து ஆட்சி செய்தார். இந்திய வரலாற்றில் நஷ்டத்தில் இருந்த ரயில்வே துறையை லாபத்தில் இயக்கியது இவர் ரயில்வே அமைச்சராக இருந்த போது தான்.

விரைவான உண்மைகள் லாலு பிரசாத் யாதவ், இந்திய இரயில்வே அமைச்சர் ...
Remove ads

வழக்கு

1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடைத் தீவன ஊழல் செய்ததாக லாலு பிரசாத் மீது வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 30 செப்டம்பர் 2013 அன்று லாலு குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கியது[2] இவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்துள்ளது, இதனால் இவர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை இழந்தார்.[3][4]

Remove ads

தேர்தலில் போட்டியிடும் தகுதி

லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாலும், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.[5]

இதனையும் காண்க

மேற்குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads