ராப்ரி தேவி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ராப்ரி தேவி
Remove ads

ராப்ரி தேவி (தேவநாகரி: रबड़ी देवी) (பிறப்பு 1959) இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவர் மூன்று மூறை பீகார் முதலமைச்சராக 1997 முதல் 2005 வரை பதவி வகித்துள்ளார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் பீகாரின் முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இந்திய இரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மனைவி ஆவார்.

விரைவான உண்மைகள் ராப்ரி தேவி, பீகார் முதலமைச்சர் ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

ராப்ரி தேவி 1956ஆம் ஆண்டு பீகாரில் உள்ள கோபால்கஞ்சில் பிறந்தார்.[1] இவரது குடும்பத்தின் வழக்கப்படி இந்திய இனிப்பு வகையின் பெயரால் இவருக்குப் பெயரிடப்பட்டது. இவரது சகோதரிகள் ஜிலேபி, ரசகுல்லா மற்றும் பான் என்று பெயரிடப்பட்டுள்ளனர்.[2] ராப்ரி தேவி 1973[3][4] ஆம் ஆண்டு தனது 17 வயதில் லாலு பிரசாத் யாதவை மணந்தார். இவருக்கு ஒன்பது குழந்தைகள். இவர்களில் ஏழு பேர் பெண்கள் மற்றும் இருவர் ஆண்கள்.[5] இவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ் பீகாரின் 4வது துணை முதல்வராக பணியாற்றுகிறார். முன்பு பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.

Remove ads

அரசியல் வாழ்க்கை

கால்நடை தீவன ஊழல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் இவரது கணவர் லாலு பிரசாத் யாதவிற்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ராப்ரி தேவி 2000 மார்ச் 11 அன்று பீகாரின் முதல் பெண் முதலமைச்சராகப் பதவியேற்றார். இவர் மார்ச் 6 2005 வரை முதல்வராகப் பதவி வகித்தார்.[6][7]

ராகோபூர் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு ராப்ரிதேவி மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில், ராப்ரி தேவி இரண்டு இடங்களில் போட்டியிட்டார்: ராகோபூர் மற்றும் சோன்பூர் சட்டமன்றத் தொகுதிகள், ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோற்றார்.[8][9]

இவர் 2014 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் பாஜகவின் ராஜீவ் பிரதாப் ரூடியிடம் தோல்வியடைந்தார்.[10]

Remove ads

விமர்சனம்

ராப்ரிதேவி பீகார் முதல்வராக நியமிக்கப்பட்டது இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் எதிர்பாராத மற்றும் மோசமான முடிவாகக் கருதப்படுகிறது.[7] இவர் ஒரு பாரம்பரிய இல்லத்தரசி மற்றும் அரசியலில் ஆர்வமோ அல்லது முன் அனுபவமோ இல்லாதவர்.[6] இவரது கல்வியறிவின்மை[[11][12] மற்றும் அனுபவமின்மை காரணமாக இவர் கடுமையான விமர்சனம் மற்றும் கடுமையான எதிர்ப்பிற்கு உட்பட்டார்.[13]

இணைய தொடர்

2021ஆம் ஆண்டில் வெளியான மகாராணி எனும் இந்திய வலைத் தொடரானது, ராப்ரி தேவி முதலமைச்சராக இருந்த காலத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.[14][15]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads