திருமகன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமகன் 2007-ஆம் ஆண்டு இரத்னகுமார் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, மீரா ஜாஸ்மின், மாளவிகா, கார்த்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் முழுக்க திருநெல்வேலியில் எடுக்கப்பட்டது. தந்தை மகனுக்கான உறவை விளக்கும் படமாக அமைந்தது.[1][2][3]
Remove ads
நடிகர்கள்
தயாரிப்பு
2005-ஆம் ஆண்டு இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது.[4] மீராவும் சூரியாவும் இணைவதாக வதந்தி வெளியானது,[5] சூரியா இதை மறுத்திருந்தார்.[6] இத்திரைப்படத்தின் பதிவின் போது சூரியாவிற்கும், இரத்தினகுமாருக்கும் கருத்துவேற்றுமை ஏற்பட்டது, மேலும் பலரும் இதே கருத்தை தெரிவித்தனர்.[7]
பாடல்கள்
- பொறந்தது - தேவா, திப்பு
- சாக் அடிக்குது - கே. கே, அனுராதா ஸ்ரீராம்
- தட்டி தட்டி- நரேஷ் ஐயர், மதுஸ்ரீ
- இதுக்குத்தானா - நரேஷ் ஐயர், மதுஸ்ரீ
- கூரை சேலை - சுவர்ணலதா
- திருமகனே - சாதனா சர்கம்
விமர்சனம்
பிலிமிபீட் வலைதளம் கொடுத்த விமர்சனத்தில் "ஜாலியாக ஆரம்பித்து ரகளையாக போகும் படம் முடியும்போது கண்களில் குளம் கட்டி வைத்து, கைக்குட்டையால் ஒற்ற வைத்து விடுகிறது. அருமையான மகன்!" என்று எழுதினர்.[8] வெப்துனியா வலைதளத்தில் எழுதிய விமர்சனத்தில் "ஒவ்வொரு காட்சியையும் கலகலப்பாக தனித்தனியே ரசிக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால் ஒட்டுமொத்த படத்துக்கான வேகத்துக்கு கட்டுமானம் சரியில்லாத கட்டடம் போல கலகலத்து பலவீனமாகத் தெரிகிறது படம். இந்தக் குறையைச் சரிசெய்திருந்தால் திருமகன் மனதைக் கவர்ந்த ஒருமகன் ஆகியிருப்பான்." என்று குறிப்பிட்டனர்.[9]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads