திருமணம் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

திருமணம் (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

திருமணம் என்பது 8 அக்டோபர் 2018 முதல் 16 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.

விரைவான உண்மைகள் திருமணம், வேறு பெயர் ...

இந்த தொடர் கன்னட மொழியில் புகழ் பெற்ற 'அக்னிசாட்சி' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். புதுமுக நடிகர் சித்து என்பவர் சந்தோஷாகவும் இவருக்கு ஜோடியாக நந்தினி தொடர் புகழ் 'ஷ்ரேயா அஞ்சன்' என்பவர் ஜனனியாகவும் நடித்துள்ளார்கள்.[1]

இந்த தொடரை அத்தியாயம் 1 முதல் 76 வரை பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் 'மித்ரன் ஜவஹர்' என்பவர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் 'பாலசுப்ரமணியம்' ஒளிப்பதிவு செய்கின்றார், இவர் தேவர் மகன், திருடா திருடா போன்ற 50 மேட்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

Remove ads

கதைச்சுருக்கம்

சந்தோஷ் வேறு ஒரு பெண்ணைக் காதலித்து, குடும்பத்தினரின் நிர்ப்பந்தத்தின் பெயரில் ஜனனியை திருமணம் செய்கின்றான். இத்திருமணத்தை விரும்பாத சந்தோஷ் ஜனையிடம் விவாகரத்து செய்ய கையெழுத்து வாங்குகிறான். விவாகரத்திற்குப் பிறகு ஜனனி மற்றும் சந்தோஷ் இடையே அன்பும், வெறுப்பும் கலந்த ஓர் உறவு நீள்கிறது. அந்த உறவில் காதலும் துளிர்க்கிறதா என்பதுதான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • சித்து - சந்தோஷ்
  • ஷ்ரேயா அஞ்சன் - ஜனனி[3]

சந்தோஷ் குடும்பத்தினர்

  • இந்துமதி - மாயா (அண்ணி)
  • சிவலிங்கம் பானு - சீனிவாசன் (அப்பா)
  • தீபக் - நவீன் (சகோதரன்)
  • டினா - ஆர்த்தி (மாயாவின் சகோதரி)
  • பீட்டோ - கெளதம் (சந்தோஷ் நண்பன்)
  • ரெய்சா ரெய் - சுவேதா (சகோதரி)

ஜனனி குடும்பத்தினர்

  • மனோஜ் குமார் - லக்ஷ்மணன் (அப்பா)
  • கிருவா - சுமதி (அம்மா)
  • பிரீத்தி (2018-2020) → வித்தியா சந்திரன் (2020) - அனிதா (சகோதரிகள்)
  • ஹரி கிருஷ்ணா - வினோத் (சகோதரன்)
  • ரேகா - வாணி (வினோத் மனைவி)
  • மைத்ரேயன் - ஆனந்த் (உறவினர்)

துணை கதாபாத்திரம்

  • ஷெரின் ஜானு - சக்தி (சந்தோஷின் முன்னாள் காதலி)
  • பாலசுப்ரமணியம்
  • அட்லின்
  • தீபா
  • சுவேதா
  • அர்ச்சனா

சிறப்புத் தோற்றம்

Remove ads

சாதனை

இந்த தொடர் சில மணிநேரம் தேசிய அளவிலான டுவிட்டர் ட்ரெண்ட்டிங்கில் திருமணம் ஹேஷ் டாக் (#திருமணம்) முதல் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருது ...

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads