நந்தினி (தொலைக்காட்சித் தொடர்)

இந்திய பேண்டஸி பன்மொழி தொலைக்காட்சி தொடர் From Wikipedia, the free encyclopedia

நந்தினி (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

நந்தினி என்பது சன் தொலைக்காட்சியில் சனவரி 23, 2017 முதல் டிசம்பர் 22, 2018 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கும் மறுஒளிபரப்பு காலை 10.30 மணிக்கும் ஒளிபரப்பான திகில் மற்றும் கற்பனை காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சித் தொடராகும். இந்த தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 4 ( தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) மொழிகளில் தயாரான தொடராகும். தென் இந்தியாவில் அதிக பொருள் செலவில் செய்த தொடரில் முதல் இடத்திலும், இந்தியா அளவில் 2ஆம் இடத்திலும் உள்ளது.

விரைவான உண்மைகள் நந்தினி, வகை ...

இந்த தொடரை சன் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் இயக்குநர் சுந்தர் சி, குஷ்பூவின் அவனி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜ்கபூர் இயக்கினார். தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட இந்த தொடர் மலையாளம், தெலுங்கு, வங்காளம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[2]

இந்த தொடரின் 2 ஆம் பாகம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 25 பெப்ரவரி 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடரின் வழித் தொடரான ஜோதி என்ற தொடர் 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது.

Remove ads

பருவங்கள்

பருவம் : 1

மேலதிகத் தகவல்கள் மொழி, அத்தியாயங்களின் எண்ணிக்கை ...

பருவம் : 2

மேலதிகத் தகவல்கள் மொழி, அத்தியாயங்களின் எண்ணிக்கை ...
Remove ads

கதைச்சுருக்கம்

இந்த தொடரின் கதை தன் குடும்பத்தை அழித்ததற்காக ராஜசேகர் குடும்பத்தை பழிவாங்க துடிக்கும் நந்தினி என்ற பாம்பும், தனது கணவனின் குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஜானகி என்ற ஆவிக்கும் நடக்கும் யுத்தம், இதில் யார் ஜெயித்தார்கள் என்பதுதான் கதை.

கதாபாத்திரங்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • நித்யா ராம் - கங்கா/நந்தினி (இரட்டை பாத்திரம்)
    • நந்தினி: சத்தி நாகம், ரத்னவேல் பூபதி மற்றும் பார்வதியின் மகள், கங்காவின் இரட்டை சகோதரி.
    • கங்கா: சாதாரண பெண், அருணின் இரண்டாவது மனைவி. ரத்னவேல் பூபதி மற்றும் பார்வதியின் மகள், மாணிக்கத்தின் வளர்ப்பு மகள்
  • மாளவிகா வேல்ஸ் - ஜானகி/சீதா (இரட்டை பாத்திரம்)
    • ஜானகி: ஆவி, அருணின் முதலாவது மனைவி. ராஜசேகர் குடும்பத்தைக் காப்பாற்ற போராடுகிறாள். தேவசேனாவின் தாய்.
    • சீதா: அருணின் மூன்றாவது மனைவி.
  • ராகுல் ரவி- அருண் ராஜசேகர்
    • ராஜசேகரின் மகன், ஜானகி, கங்கா மற்றும் சீதாவின் கணவன். தேவசேனாவின் தந்தை.
  • பேபி அதித்ரி- தேவசேனா
    • அருண்-ஜானகியின் மகள்.
  • குஷ்பூ - சிவ நாகம்/பார்வதி
    • கங்கா, நந்தினியின் தாய், ரத்னவேல் பூபதி யின் மனைவி. ராஜசேகரால் வஞ்சிக்கப்பட்டவள்.
  • ரியாஸ் கான் - சேயநாயகி/ரத்னவேல் பூபதி
    • ரத்னவேல் பூபதி: பார்வதியின் கணவன், நந்தினி மற்றும் கங்காவின் தந்தை.
    • சேயநாயகி: திருநங்கை, கருப்புசாமியின் அருள் உள்ளவர்.
  • காயத்ரி ஜெயராம்- பைரவி, மந்திரவாதி
    • தனது தங்கையின் இறப்பிற்கு அருண் தான் காரணம் என நினைத்து அருணை கொலை செய்ய துடிக்கும் மந்திரவாதி பெண்.
  • விஜயகுமார் - ராஜசேகர்
    • பார்வதியின் மரணத்தில் சம்பந்தம் உள்ளவர். (இந்த தொடரில் நந்தினியால் கொலை செய்யப்பட்டார்)

துணை கதாபாத்திரம்

  • ரேகா - மாதவி
    • நம்பூதிரியின் தங்கை, சிவ தவம் புரிந்தவள். பார்வதிக்கு துரோகம் இழைத்தவள்.
  • நரசிம்ம ராஜூ - முனியப்பன்
    • காட்டம்மன் கோவில் பூசாரி.
  • கே. எஸ். ஜி. வெங்கடேஷ் - மாணிக்கம்
    • கங்காவின் வளர்ப்பு தந்தை.
  • விச்சு விசுவநாத் - விச்சு
    • ராஜசேகரின் கூட்டாளி.
  • கிரிஷ் - குமார்
    • ராஜசேகரின் கூட்டாளி.
  • சச்சு - அன்னபூரணி
    • ராஜசேகரின் அக்கா.
  • விஜயலட்சுமி → கன்யா பாரதி - தேவி
    • ராஜசேகரின் தங்கை.
  • ஸ்ரீகணேஷ் - ஈஸ்வரன்
    • தேவியின் கணவர்.
  • மஞ்சுளா - ஷாந்தி
    • தேவியின் மகள்.
  • ரமேஷ் பண்டித் - தர்மராஜ்
    • ராஜசேகரின் மச்சான்.
  • தமீம் அன்சாரி - பாலாஜி
    • அருணின் நண்பர்.
  • கீர்த்தி - மாயா
    • தர்மராஜின் மகள்.
  • பத்மினி ஜகதீஷ் - மஞ்சு
    • ராஜசேகரின் தங்கை
  • ஷப்னம் - ரம்யா
    • மஞ்சுவின் மகள்.
  • வினோத் - நம்பூதிரி
    • காலச்சக்கரங்களைக் கைப்பற்ற சதித்திட்டம் தீட்டியவன்.
  • விஜய துர்கா - சாமுண்டி
    • காலச்சக்கரங்களைக் கைப்பற்ற எண்ணிய மந்திரவாதி.
  • மீனா - லீலா
    • ராஜசேகரின் தங்கை. தர்மராஜின் மனைவி.
  • கவிதா - செல்வராணி
    • ராஜசேகரின் இரண்டாவது மனைவி
  • சங்கர் - சத்தியநாராயணன்
    • செல்வராணியின் தம்பி.
  • ராணி - மல்லிகா
    • சத்தியநாராயணனின் மனைவி.
  • கிரண் - மூர்த்தி
    • தர்மராஜின் மகன்.
  • கௌசல்யா - ரங்கநாயகி
  • கலைராணி - நாச்சியாரம்மா
    • ஆவிகளைக் கட்டுப்படுத்தும் மந்திரவாதி.
  • ஷ்ரேயா அஞ்சன் - காயத்ரி
    • முனியப்பனின் மகள்

(தொடரில் இறந்துவிட்டார்)

Remove ads

படப்பிடிப்பு

இந்த தொடர் மலேசியா, மைசூர், கல்லிடைகுறிச்சி, பொள்ளாச்சி, ரிஷிகேஷ் போன்ற இடங்களில் படப்பிடிப்பு செய்யப்பட்டது.

சர்வதேச ஒளிபரப்பு

மேலதிகத் தகவல்கள் நாடு, அலைவரிசை ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads