திருவனந்தபுரம் தொடருந்து கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம் என்பது இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கீழுள்ள ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். இதனுடைய தலைமையகம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
திருவனந்தபுரம் இரயில்வே கோட்டமானது, ஒலவக்காடு கோட்டத்திலிருந்து ஷொறணூர், கொச்சின் துறைமுகம் பிரிவு மற்றும் மதுரை கோட்டத்திலிருந்து எர்ணாகுளம்-திருவனந்தபுரம்-கன்னியாகுமரி பிரிவு ஆகியவை பிரிக்கப்பட்டு 1979-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் உருவாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் காயங்குளம்-கொல்லம் வழித்தடமானது 1996-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் கொல்லம்-திருவனந்தபுரம் வழித்தடம் 2000-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் எர்ணாகுளம்-திருவனந்தபுரம் வழித்தடமானது 2006-ம் ஆண்டு மின்மயமாக்கப்பட்டது.[1]
Remove ads
தொடருந்து நிலையங்களின் போக்குவரத்து மற்றும் பயணிகள் வருவாய் விவரங்கள்
Remove ads
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இரட்டைப் பாதை
- 26 ஜீலை 2025 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தின் எஞ்சிய ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு (12.87 கிலோ மீட்டர்), திருநெல்வேலி-மேலப்பாளையம் (3.6 கிலோ மீட்டர்) பிரிவுகளின் இரட்டை ரயில் பாதைத் திட்டம், ₹650 கோடி மதிப்பினில் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி தொடருந்து பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் 21 கிலோ மீட்டர் தூர நாகர்கோவில் டவுன்-கன்னியாகுமரி பிரிவின் இரட்டைப்பாதையை நாட்டிற்கு அர்பணித்தார்.[4]
சென்னை - குமரி, தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையிலான போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும். கூடுதலாக, பயண நேரத்தைக் குறைக்கும். மேலும் பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் திறனை மேம்படுத்துவதன் மூலம் பிராந்தியப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.
அமிர்த பாரத் நிலைய மேம்பாடு திட்டங்கள்
அமிர்த பாரத் நிலைய திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1275 நிலையங்களுள் திருவனந்தபுரம் கோட்டத்தில் பின்வரும் தமிழ்நாட்டு நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.[5]
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads