திலகபாமா
தமிழ்நாட்டு அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திலகபாமா என்பவர் ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் ஆவார்.[1] பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளராக பொறுப்பு வகித்து வருகின்றார்.[2] பாரதி இலக்கிய சங்கம் அமைத்து பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார். சிவகாசியில் உள்ள மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவர் சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் என்கிற பெயரில் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பட்டிவீரன் பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியனார் பற்றி எழுதிய வரலாற்று நூல் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.
Remove ads
பிறப்பு
திலகபாமா திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்தார். அவ்வூரிலேயே பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், மதுரை பாத்திமா கல்லூரியில், வணிகவியல் படித்தார். இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே, கவிதைகளை எழுதத் தொடங்கினார். இவர் தற்போது சிவகாசியில் வசித்து வருகிறார்.
வெளியான நூல்கள்
கவிதை தொகுப்புகள்
- சூரியனுக்கும் கிழக்கே
- சூரியாள்
- சிறகுகளோடு அக்னிப் பூக்களாய்
- கண்ணாடிப் பாதரட்சைகள்
- எட்டாவது பிறவி
- கூர்பச்சையங்கள்
- கூந்தல் நதிக் கதைகள்
- கரையாத உப்புப் பெண்
- திலகபாமா கவிதைகள் (ஒட்டு மொத்த கவிதை தொகுப்பு)
- திகம்பரசக்கர குருதி
சிறுகதை தொகுப்புகள்
- நனைந்த நதி
- மறைவாள் வீச்சு
- நிசும்பசூதினியும் வேதாளமும்
புதினம்
- கழுவேற்றப்பட்ட மீன்கள்
- தாருகாவனம்
- சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் (ஊ.பு.அ.சௌந்திரபாண்டியனார் வரலாறு)
கட்டுரைத் தொகுப்புகள்
- திசைகளின் தரிசனம் (பயணக் கட்டுரைகள்)
- இருப்பின் தர்க்கத்தில்
- வெளிச்சத்தை சிறைப்படுத்திய பதினான்கு நாட்கள் (தன் அனுபவம்)
- நதியும் நதி சார்ந்த கொள்ளையும்
Remove ads
சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
திலகபாமா, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார்.[3]. இத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் இ. பெரியசாமி வெற்றி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads