தில்லானா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தில்லானா (Tillana) என்பது தென்னிந்தியக் கருநாடக இசையில் ஒரு தாளப் பகுதியாகும். இது ஒரு கச்சேரியின் முடிவிலும் பாரம்பரிய இந்திய நடன நிகழ்ச்சிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, லால்குடி ஜெயராமன் உள்ளிட்ட சில இசைக்கலைஞர்களால் பிரபலப்படுத்தப்பட்டது.[1][2][3]
Remove ads
அங்க வேறுபாடுகள்
இந்த உணர்ச்சிவசப்பட்ட உருப்படியில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்க வித்தியாசம் உண்டு. ஒவ்வோர் அங்கமும் வெவ்வேறு தாதுவில் அமைந்திருக்கும். சில தில்லானாக்களில் அனுபல்லவி இல்லாமலும் இருக்கும். அம்மாதிரித் தில்லானாக்கள் தவித்தாதுக்கள், உபயோகங்கள், சமஷ்டி, சரணங்கள் போன்றவைகளுடைய தாதுக் கிருதிகளுக்குச் சமமாக இருக்கின்றன. பல்லவியும் அனுபல்லவியும் ஜதிகளாகவும், சரணத்திலுள்ள வார்த்தைகள் சொற்கட்டு ஸ்வரங்களாகவும் இருக்கும்.
Remove ads
சிறப்புகள்
சில தில்லானாக்கள் சங்கதிகளுடன் அமைந்துள்ளன. இம்மாதிரியான உருப்படிகள் பாட்டுக் கச்சேரிகளில் பல்லவி (இராகம், தானம், பல்லவி) பாடிய பிறகு பாடுவார்கள். நாட்டியக் கச்சேரிகளிலும் பாட்டுக் கச்சேரிகளிலும் முதலில் இதைப் பாடுவது வழக்கம். ஹரிகாலாட்சேபங்களிலும் கதை ஆரம்பிக்க முன்னரும் பூர்வீகப் பிடிகை முடிந்த பின்னும் தில்லானாக்களைப் பாடுவது வழக்கம்.
இதன் கானக்கிரமம் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பாடுவதேயாகும். மகாவைத்தியநாதையருடைய தில்லானா கௌரி நாயக மிகவும் உயர்ந்த நீண்ட உருப்படி ஆகும். அந்த உருப்படி முழுவதும் இரண்டே ஆவர்த்தனத்தில் அமைந்துள்ளது. முதல் ஆவர்த்தனம் வார்த்தைகளுடனும், இரண்டாவது ஆவர்த்தனம் ஜதிகளுடனும் அமைந்துள்ளது. குன்றக்குடி கிருஷ்ணய்யருடைய கம்பராமாயணத் தில்லானா ஒரு சிறந்த உருப்படி. ஜாவளிகளும் தில்லானாக்களும் உருப்படியில் சிறந்ததாகவும், கானக்கிரமம் நான்கு நிமிடங்களுக்குள் அடங்கியதாகவும் அமைந்துள்ளன.
Remove ads
தில்லானாக்களை இயற்றியோர்
- சுவாதித்திருநாள் மகாராஜா
- வீரபத்திர ஐயர்.
- பல்லவி சேஷய்யர்.
- மைசூர் சதாசிவராவ்.
- பட்டணம் சுப்பிரமணிய அய்யர்.
- குன்றக்குடி கிருஷ்ணையர்.
- இராமநாதபுரம் சிறீனிவாச அய்யங்கார்.
- இலுப்பூர் பொன்னுச்சாமிப்பிள்ளை.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads