தீவு நடைமேடை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தீவு நடைமேடை அல்லது மத்திய நடைமேடை (மத்திய தளம்); (ஆங்கிலம்: Island Platform; அல்லது Center Platform) என்பது ஒரு தொடருந்து நிலையம் அல்லது ஓர் இடை வழி பரிமாற்றத்தின் (Transitway Interchange) இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் ஓர் ஒற்றை நடைமேடை அமைக்கப்பட்ட நிலைய அமைப்பைக் குறிப்பிடுவதாகும். சில கட்டங்களில், இரட்டை இருப்புப்பாதைகளைக் கொண்ட நிலையங்களுக்கு இடையில் இந்த வகையான தீவு மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் தீவு நடைமேடைகளைக் குறைந்த செலவில் அமைக்கலாம்; மற்றும் குறைந்த பரப்பளவு கொண்ட இடத்திலும் அமைப்பதற்குப் பொருத்தமாகவும் அமைகின்றன.[1]


பெரிய தொடருந்து நிலையங்களிலும் தீவு நடைமேடை அமைப்பு மிகப் பயனுள்ளதாக அமைகிறது. இருப்புப்பாதைகளின் இருபுறமும் பக்க நடைமேடைகளுக்கு பதிலாக; ஒரே திசையில் பயணிக்கும் தொடருந்துகளை ஒரே நடைமேடையின் எதிர் பக்கங்களிலிருந்து அணுகுவதற்கு இந்த அமைப்பு மிகப் பயனுள்ளதாக அமைகிறது. இது இரண்டு தடங்களுக்கும் இடையிலான பரிமாற்றங்களை எளிதாக்குகிறது மற்றும் துரிதப்படுத்துகிறது.
Remove ads
பயன்பாடு
பல நடைமேடைகளைக் கொண்ட எந்த நிலையத்திற்கும் இத்தகைய தீவு நடைமேடைகள் அவசியம் என கருதப்படுகிறது. இரண்டு பக்கங்களிலும் இரண்டு நடைமேடைகளைக் கொண்ட இரண்டு சிறிய நிலையங்களை அமைப்பதற்குப் பதிலாக ஒரே ஓர் ஒற்றை தீவு நடைமேடை அமைப்பதால் பெரும் அளவில் நன்மைகள் ஏற்படுகின்றன என அறியப்படுகிறது.[2]
தீவு நடைமேடைகளை அமைப்பதால் கடைகள், கழிப்பறைகள் மற்றும் காத்திருப்பு அறைகள் போன்ற வசதிகளை ஒரு பக்கத்தில் மட்டும் அல்லாமல்; இரு இருப்புப் பாதைகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் ஏற்படுகிறது. மாற்றுத்திறனாளிப் பயணிகள்; இருப்புப் பாதைகளுக்கு இடையிலான தங்களின் பயணத்தை மாற்றிக் கொள்வதையும் ஒரு தீவு நடைமேடை எளிதாக்குகிறது.
Remove ads
சிறப்புக் கூறுகள்
இருப்புப் பாதைகள் நுழைவாயில் மட்டத்திற்கு மேலே அல்லது கீழே இருந்தால், நிலையத்திற்கு ஒரே ஒரு படிக்கட்டு மற்றும் ஒரு மின்தூக்கி அல்லது சாய்வுதளம் மட்டுமே தேவைப்படும். இது தளங்களுக்கு எளிதான அணுகலை அனுமதிக்கிறது.
ஒரு தீவு நடைமேடை பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க போதுமான அகலமாக இல்லாவிட்டால், கூட்ட நெரிசல்களில் ஆபத்தை விளைவிக்கலம். சில வேளைகளில் பயணிகள் இருப்புப் பாதையில் தள்ளப் படலாம். அந்த வகையில், அவ்வாறான நேரங்களில் ஆபத்துகளைக் குறைக்க, அதிக அளவிலான பயணிகள் நிலையத்திற்குள் நுழைவது குறைக்கப்படலாம்.[3]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads