சைத்தியம்

From Wikipedia, the free encyclopedia

சைத்தியம்
Remove ads

சைத்தியம் (chaitya) என்பது பௌத்தர்களின் வழிபாட்டு மண்டபம் அல்லது பிரார்த்தனை கூடம் ஆகும். இதன் ஒரு முனையில் தூபி அமைந்திருக்கும்.[1] நவீன இந்தியக் கட்டிடக் கலை சாத்திர நூல்களில் இதனை சைத்திய கிரகம் எனும் கூட்டு வழிபாட்டு மண்டபம் அல்லது பிரார்த்தனை மண்டபம் எனப்படுகிறது.

Thumb
அஜந்தா குகையில் உள்ள பௌத்த சைத்தியம்

வரலாறு

Thumb
சைத்திய கிரகத்தின் தொல்லியல் எச்சங்கள், லலித்கிரி, ஒடிசா

பெருமளவில் பௌத்த பிக்குகள் ஒன்றாகக் கூடி தங்கி புத்தரை வழிபாடு செய்யவும், தியானம் செய்வதற்காக சைத்தியங்கள் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.[2] அசோகர் காலத்திய விராட்நகரில் அமைந்த சைத்தியங்கள், குகைகளை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை சைத்திய மண்டபங்கள் பல தூபிகளுடன் அமைக்கப்பட்டது[3]

Thumb
பாஜா குகையின் சைத்திய மண்டபத்தூண்கள்

கிமு முதலாம் நூற்றாண்டில் பஜா குகைகளில் அமைக்கப்பட்ட மௌரியக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட பல தளங்களுடைன் கூடிய குடைவரை சைத்தியங்களில் மரக்கதவுகள், சன்னல்கள், பால்கனிகள் மற்றும் ஆண், பெண்களின் சிற்பங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. சைத்தியத்தின் நடுவில் கௌதம புத்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.[3]

நேபாளத்தில் பௌத்த சமயத்தைப் பின்பற்றும் செர்ப்பாக்கள், மகர்கள், தமாங் மற்றும் நேவாரிகளின் வழிபாட்டுத் தலமாக சைத்தியங்கள் கட்டப்பட்டது. 12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நேவாரி பௌத்த மக்கள் காட்மாண்டு சமவெளிகளில் உள்ள சைத்தியங்களில் ஐந்து தியானி புத்தர்களின் சிற்பங்களை வைத்து வழிபட்டனர்.

Remove ads

புகழ் பெற்ற குடைவரை சைத்தியங்கள்

பாஜா குகைகள், கர்லா குகைகள் எல்லோரா, அஜந்தா குகைகள், உதயகிரி, கந்தகிரி குகைகள், லலித்கிரி, உதயகிரி குகைகள், அவுரங்காபாத் குகைகள் மற்றும் பாண்டவர் குகைகளில் உள்ள பௌத்த குடைவரை சைத்தியங்கள் புகழ் பெற்றது.

குறிப்பாக அவுரங்காபாத் குகைகள் மற்றும் பல தூண்களுடன் செவ்வக வடிவில் சைத்தியங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் உட்சுவர்கள் நன்கு பொலிவூட்டப்பட்டுள்ளது. இதன் அனைத்து தூண்களில் மேல் போதிகை சிற்பங்களுடனும், தூணின் அடியில் கால்கள் மடித்து அமர்ந்த நிலையில் யானையின் சிற்பங்களுடனும் கூடியது. சைத்திய மண்டபத்தின் கூரை அழகிய குடை வடிவில் அமைந்துள்ளது. இச்சைத்தியங்கள் 40 மீட்டர் நீளத்துடனும், 15 அகலத்துடனும், 15மீட்டர் உயரத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.

Remove ads

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads