தெனாசிரிம் மலைத்தொடர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெனாசிரிம் மலைத்தொடர் அல்லது தெனாசிரிம் மலைகள் (மலாய்: Banjaran Tanah Seri / Banjaran Tenang Sari; ஆங்கிலம்: Tenasserim Hills / Tenasserim Range பர்மியம்: တနင်္သာရီ တောင်တန်း; தாய் மொழி: ทิวเขาตะนาวศรี / Thio Khao Tanao Si); சீனம்: 丹那沙林山脉) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோ-மலாயா மலை அமைப்பின் (Indo-Malayan Mountain System) புவியியல் பெயராகும். இந்த மலைச் சங்கிலி சுமார் 1,700 கி.மீ. நீளம் கொண்டது.
இந்த மலைகள் தாய்லாந்து மற்றும் மியான்மர் இடையே அவற்றின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஒரு முக்கியமான எல்லைத் தடைகளாக அமைகின்றன.
Remove ads
பொது
இந்த பரந்த மலைத் தொடரின் தெற்குப் பகுதி கிரா பூசந்தி (Kra Isthmus) வழியாக தீபகற்ப மலேசியாவை கடந்து; சிங்கப்பூருக்கு மிக அருகில் முற்றுப் பெறுகிறது. இந்த மலைத் தொடரின் மூலமாக மலேசியா; தாய்லாந்து நாடுகளில் பல ஆறுகள் உருவாகின்றன.[1]
புவியியல்
நீண்ட கரும் கற்களான மலை முகடுகளைக் கொண்ட தெனாசிரிம் மலைகள் இமயமலையை விட பழமையானவை. இந்த மலைகளின் பெரும் பகுதிகளில் அடர்ந்த வெப்பமண்டல ஈரமான காடுகள் (Tropical Moist Forests) படர்ந்து உள்ளன.[2][3]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads