ஆசிய ஒலிம்பிக் மன்றம்

From Wikipedia, the free encyclopedia

ஆசிய ஒலிம்பிக் மன்றம்
Remove ads

ஆசிய ஒலிம்பிக் மன்றம் (Olympic Council of Asia, OCA) ஆசியாவில் உடல் திறன் விளையாட்டுக்களை கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். இதில் தற்போது 45 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் உறுப்பினராக உள்ளன. இதன் தற்போதைய தலைவராக சேக் பகாத் அல்-சபாவும் துணைத்தலைவராக மொகமது அலியாபாதியும் உள்ளனர். இதன் மிகப் பழமையான தேசிய ஒலிம்பிக் குழுக்களாக சப்பானும் பிலிப்பீன்சும் உள்ளன; இவற்றை பன்னாட்டு ஒலிம்பிக் குழு 1911இல் அங்கீகரித்தது. 2003இல் சேர்ந்த கிழக்குத் திமோர் மிகப் புதிய தேசிய ஒலிம்பிக் குழுவாகும். ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைமையகம் குவைத்து நகரத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் உருவாக்கம், வகை ...
Remove ads

உறுப்பினர் நாடுகள்

கீழ்கண்ட பட்டியலில் தேசிய ஒலிம்பிக் குழு உருவான ஆண்டும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டும் (இரண்டும் வெவ்வேறானால்) கொடுக்கப்பட்டுள்ளன. மக்காவு தேசிய ஒலிம்பிக் குழுவினை ஆசிய மன்றம் அங்கீகரித்துள்ள நிலையில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு இன்னமும் அங்கீகரிக்கவில்லை.

மேலதிகத் தகவல்கள் நாடு, குறியீடு ...

முன்னாள் உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் நாடு, குறியீடு ...

இசுரேல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தது. 1981இல் இது சீரமைக்கப்பட்டு ஆசிய ஒலிம்பிக் மன்றமாக நிறுவப்பட்டபோது ஒதுக்கப்பட்டது. இசுரேல் தற்போது ஐரோப்பிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினராக உள்ளது. பெப்ரவரி 22, 2014 அன்று ஆத்திரேலியா 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாது என்றும் ஆசிய ஒலிம்பிக் மன்றத்திலிருந்து வெளியேறி ஓசியானியா தேசிய ஒலிம்பிக் குழுக்களில் உறுப்பினராக இணைகின்றது எனவும் அறிவிக்கப்பட்டது.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads