தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம்

கிள்ளான் தெலுக் காடோங் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் நிலையம் From Wikipedia, the free encyclopedia

தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம்map
Remove ads

தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Teluk Gadong Komuter Station; மலாய்: Stesen Komuter Teluk Gadong); சீனம்: 直落牙弄) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் தெலுக் காடோங் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.

விரைவான உண்மைகள் தெலுக் காடோங் Teluk Gadong, பொது தகவல்கள் ...

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் கிள்ளான்; மற்றும் கோலா கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது.[1]

இந்த நிலையம் தெலுக் காடோங் புறநகர்ப் பகுதி; தென் மேற்கு கிள்ளான் பகுதி போன்ற பகுதிகளின் போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[2]

Remove ads

பொது

1995-இல் கிள்ளான் பகுதியில் பயணிகள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் மலேசியாவின் தொடக்கக் கால பயணிகள் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளது; மற்றும் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.[3]

தெலுக் காடோங் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

தாமான் கெம்பீரா வளாகம்

1995-ஆம் ஆண்டில் முதன்முதலாகக் கட்டப்பட்ட பழைய கட்டிடத்திற்குப் பதிலாக, 2020-ஆம் ஆண்டில் தெலுக் காடோங் கொமுட்டர் நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. தாமான் கெம்பீரா (Taman Gembira) எனும் குடியிருப்பு வளாகம் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads