தேசியக் குடியுரிமைப் பதிவேடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசியக் குடியுரிமைப் பதிவேடு (National Register of Citizens - (NRC) இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, தேசியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம், 2003 மற்றும் 2019 இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படியும் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை இந்தியா முழுமைக்கும் பராமரிக்க இந்திய அரசு டிசமபர் 2019-இல் முடிவு செய்துள்ளது. இந்தியக் குடிமக்கள் அனைவரும் சட்டப்படி இப்பதிவேட்டில் தங்கள் பெயரைப் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.[1][2]

அசாமில் தேசிய குடியுரிமைப் பதிவேடு 2013-2014 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.[3] அசாம் போன்று இந்தியா முழுமைக்கும் 2021 ஆண்டுக்குள் தேசிய குடியுரிமைப் பதிவேட்டை பராமரித்து முடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. [4] 2003 தேசியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலிருந்து தேவையான குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை பராமரிக்க வேண்டும். [5] இந்தியா முழுமைக்கும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டை பேணுவதற்கு தனியாக புதிய விதிகள் அல்லது சட்டங்கள் தேவையில்லை. [6]

1951-ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட்டது. [7] இருப்பினும் 1951க்கு பின்னர் அசாமில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பராமரிக்கப்படவில்லை.

இதனால் அசாமில் குடியேறிய வெளிநாட்டு கள்ளக் குடியேறிகளை அடையாளம் கண்டறிந்து வெளியேற்றுவதற்கு 2005-இல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, இந்திய அரசு 2005-ஆம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் மட்டும் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை தொடர்ந்து பராமரிக்க முடிவு செய்தது.

ஆனால் இந்திய அரசு அசாமில் தேசிய குடியுரிமைப் பதிவேடு பராமரிக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால், 2013-இல் இந்திய உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட்டு, அசாமில் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை பராமரிப்பை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் ஒரு குழுவை நியமித்தது. [3] இறுதியாக 31 ஆகஸ்டு 2019 அன்று அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு 31 ஆகஸ்டு 2019-இல் வெளியிடப்பட்டது. அசாமில் வாழ்ந்த 33 மில்லியன் (3.30 கோடி) மக்களில் 1.9 மில்லியன் (19 இலட்சம்) மக்கள் அசாம் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறவில்லை. [8] இதனால் 1.9 மில்லியன் மக்கள் இந்தியக் குடியுரிமையை இழப்பதற்கு வாய்ப்புள்ளது.[9] இந்த 1.9 மில்லியன் மக்களில் பெரும்பாலோர் வங்காளதேசத்திலிருந்து அசாமில் குடியேறிய வங்க மொழி பேசும் இந்துக்கள் ஆவார்.

இந்தியாவில் அகதிகளாக குடியேறிய வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் இசுலாமியர் அல்லாத சிறுபான்மை மக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு வசதியாக இந்திய நாடாளுமன்றம் டிசம்பர் 2019-இல் 2019 இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் இயற்றியது. இச்சட்டத்திற்கு எதிராகவும், அசாமில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட இசுலாமிய வங்கதேசத்தவர்களை உடனடியாக நாடு கடத்த வேண்டும் எனக் கூறி இந்திய அரசுக்கு எதிராக, அசாமிய மக்கள் தொடர் கடை அடைப்புகள் மற்றும் போராட்டங்கள் மேற்கொண்டனர்.[10][11][12]

மேலும் அசாம் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் இடம் பெறாத அசாமில் குடியேறி வாழும் வங்கதேச இசுலாமியர்கள் மத்தியில் தாங்கள் கைது செய்யப்பட்டு தடை முகாம்களில் வைக்கப்படுவோம் அல்லது நாடு கடத்தப்படுவோம் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. [13]

முன்னதாக 2019 இந்தியப் பொதுத் தேர்தலின் போது, இந்திய அரசை தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை இந்திய நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவோம் எனக்கூறியிருந்தது.[4] 19 நவம்பர் 2019 அன்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் சா மாநிலங்களவையில் இந்தியா முழுவதும் தேசியக் குடியுரிமைப் பதிவேடு பராமரிக்கப்படும் என அறிவித்தார்.[14]

Remove ads

எதிர்ப்புகள்

தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டை பராமரிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளா மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது.[15][16] மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்தியாவில் தேசியக் குடியுரிமைப் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் 2019 குடியுரிமை (திருத்தச்) சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.[17]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads