தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)(Nationalist Congress Party – Sharadchandra Pawar) அல்லது என்சிபி-எஸ்பி என்பது இந்தியாவில் மகாராட்டிராவில் சரத் பவார் தலைமையில் உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். அஜித் பவார் தலைமையிலான குழுவைத் தேசியவாத காங்கிரசு கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர் இக்கட்சி உருவாக்கப்பட்டது.[7]
Remove ads
வரலாறு
சூலை 2023இல், அஜித் பவார், 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு கட்சி விட்டு வெளியேறி, ஆளும் சிவசேனா-பாஜக அரசாங்கத்தில் மகாராட்டிராவின் துணை முதல்வராகச் சேர்ந்தார்.[8] இதனால் தேசியவாத காங்கிரசு கட்சியில் பிளவு ஏற்பட்டது.[9] 7 பிப்ரவரி 2024 அன்று, இந்தியத் தேர்தல் ஆணையம் அஜித் பவார் தலைமையிலான பிரிவுக்குக் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வழங்கியது.[7] சரத் பவார் தலைமையிலான பிரிவினர் "தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)" என்ற புதிய பெயரைப் பெற்றனர்.[10]
Remove ads
கட்சி சின்னம்
இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு "ஒரு மனிதன் குழல் ஊதும் (trumpet) " (மராத்தியில் துட்டாரி வஜ்வனாரா மனூஸ்) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.[11]
கட்சிக் கொடி
தேசியவாத காங்கிரசு கட்சியின் கொடி (சரத்சந்திர பவார்) இதன் சின்னம் மற்றும் இந்தியக் கொடியைக் கொண்டுள்ளது.[12]
மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்
- தடித்த எழுத்துக்கள் மாநிலங்களவையில் தலைவரைக் குறிக்கிறது
மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
- தடித்த எழுத்துக்கள் மக்களவையில் தேசியவாத காங்கிரசு (சப) தலைவரை குறிக்கிறது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads