இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி
இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பெரிய கூடாரக் கூட்டணி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance I.N.D.I.A.)[2] என்பது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான பிரதமர் மோடியின் ஆட்சியில் நடக்கும் பெரும்பான்மைவாதம், ஊழல்வாதம், அரசுடமையை தனியார் மயமாக்கல், தனியார்துவவாதம், மக்களுக்கு எதிரான பொருளாதார விலைவாசி/வரி உயர்வு மற்றும் மதவாத/இனவாத ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்திய அளவிலான பிற மாநில கட்சி தலைவர்கள் இணைந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியை மையமாக கொண்டு இந்திய நாட்டில் மதச்சார்பின்மை, முற்போக்குவாதம், பொதுவுடைமை, சோசலிசம் கொள்கையை மீண்டும் மீட்டேடுப்பதற்காக பல மாநில அரசியல் கட்சி தலைவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். இக்கூட்டணி 2024 இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்நோக்கம் விதமாக இந்தியாவில் உள்ள 26 அரசியல் கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருந்தனர்.[3]
Remove ads
இந்தியா கூட்டணி உருவான வரலாறு
- மேலும் இக்கூட்டணியில் டெல்லி/பஞ்சாப்பில் அரவிந் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, பீகாரில் லாலு பிரசாந்த் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரேவின் சிவ சேனா (உ.பா.தா), தமிழ்நாட்டில் மு. க. ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அம்மாநில தலைவர்களின் முக்கியமான பெரிய மாநில கட்சிகள் ஆகும்.
- இதை தவிர இந்தியா கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரசு மையமாக கொண்டு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சி, இந்திய ஒன்றிய முசுலிம் லீக் போன்ற சர்வதேச கட்சிகளும் இடம் பெற்று இருந்தனர்.
- இக்கூட்டணி 2023 சூன் 23 அன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் பட்னாவில் முதலாவது எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
- அதன் பிறகு இந்தியாவை ஆளும் பாஜக தலைமையிலான பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை எதிர்கொள்ளும் விதமாக எதிரணியில் புதிய கூட்டணிகான முன்மொழிவு பரிந்துரைக்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவி சோனியா காந்தி தலைமையில் 2023 சூலை 18 இல் பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் கூட்டணிக்கான முன்மொழிவு ஏற்கப்பட்டு இந்தியா கூட்டணி என்று பெயரும் இறுதி செய்யப்பட்டது.[4]
- இந்தக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்றாவது கூட்டம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.[5]
Remove ads
நிர்வாக அமைப்பு
கூட்டணியில் உள்ள கட்சிகள்
இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கியது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் 26 கட்சிகள்:[6]
Remove ads
முன்பிருந்த கட்சிகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads