தேசிய ஒலிம்பிக் குழு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய ஒலிம்பிக் குழு (National Olympic Committee, NOC) உலகளாவிய ஒலிம்பிக் இயக்கத்தின் தேசிய அங்கமாகும். பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் குழுக்கள் தங்கள் நாட்டு மக்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க பொறுப்பானவர்கள். இக்குழுக்கள் தங்கள் நாட்டு நகரங்கள் வருங்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமை பெற பரிந்துரைக்கும் அதிகாரம் கொண்டவர்கள். மேலும் தங்கள் புவியியல் பகுதியில் தேசிய அளவில் விளையாட்டாளர்களை வளர்த்தெடுத்து மேம்படுத்தியும் பயிற்சியாளர்களையும் விளையாட்டு நிருவாகிகளையும் பயிற்றுவித்தும் ஒரு கட்டமைப்பை உருவாக்குகின்றனர்.

2011ஆம் ஆண்டு நிலவரப்படி, தன்னாளுமை பெற்ற நாடுகள் மற்றும் பிற புவியியல் பகுதிகளின் சார்பாளர்களாக 204 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் உள்ளன. 193 ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில் 192 பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் குழுக்களைக் கொண்டுள்ளன. சூலை 9,2011இல் விடுதலை பெற்ற தெற்கு சூடான் மட்டுமே விதிவிலக்காக இதுவரை தேசிய ஒலிம்பிக் குழுவை அமைக்கவில்லை.[1])

பன்னாட்டுக் குழு அங்கீகரித்துள்ள 12 பிற நிலப்பகுதிகள்:

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads