தேசிய விலங்கு உயிரிதொழில்நுட்ப நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய விலங்கு உயிரிதொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Animal Biotechnology)[1] என்பது இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உயிரித்தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகும்.[2] இந்நிறுவனம் இந்தியாவின் ஹைதராபாத்தில் பேராசிரியர் பல்லு ரெட்டண்ண தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. காச்சிபெளலியில் உள்ள ஐதராபாத்து பல்கலைக்கழகத்தின் ஆர்யபட்டா தொகுதியில் விலங்கு உயிரிதொழில்நுட்ப நிறுவனம் அமைந்துள்ளது.[3]

விரைவான உண்மைகள் குறிக்கோள், நிறுவப்பட்டது ...

இந்நிறுவனத்தின் முதன்மை நோக்கம்/செயற்பாடானது[4] புதுமையான மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் பொது மற்றும் தொழில்துறைக்குப் பயன் தரவல்ல உலகளாவிய போட்டி கால்நடைகளை (பண்ணை விலங்குகள்) மேம்படுத்துவதாகும். உலகளவில் போட்டியிடும் கால்நடை பொருட்கள், மருந்துகள் (மருந்துகள்), ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் விலங்குகளின் சுகாதார பராமரிப்பு தொடர்பான பிற உயிரியல் பொருட்களின் உற்பத்தியில் சிறந்து விளங்குவதை ஆய்வாளர்கள் வலியுறுத்துவார்கள்.[5]

Remove ads

கல்வி மற்றும் ஆராய்ச்சி

தேசிய விலங்கு உயிரிதொழில்நுட்ப நிறுவனத்தின் முக்கிய கவனம் விலங்கு உயிரித் தொழில்நுட்ப துறையில் தொழில்முனைவோரை மேம்படுத்துவது மற்றும் கால்நடைகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல் மற்றும் மனிதக்குலத்திற்கு நன்மை பயக்கும். பல்வேறு பிரிவுகளின் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல். உதாரணமாக, மரபியல், ஊட்டச்சத்து செறிவூட்டல், மரபணு மாற்றுத் தொழில்நுட்பம், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்க உயிரி தொழில்நுட்பம் ஆய்வு மேற்கொள்ளுதல். இந்த ஆய்வுக் கூடங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் நடத்துவருகின்றன்.[6] முதுநிலை அறிவியல் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு, இளம் விஞ்ஞானிகளுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads