தேஷ்முக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேஷ்முக் (Deshmukh), தென் இந்தியாவின் மகாராட்டிரம்,கோவா, கர்நாடகம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் வட இந்தியாவின் குஜராத், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் பிராமணர் மற்றும் ஆதிக்கச் சாதி நிலக்கிழார்களுக்கு முகலாயர் மற்றும் தக்காணச் சுல்தான்கள் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட பட்டப் பெயர் ஆகும்.[1]
பெயரிடல்
சமஸ்கிருத மொழியில் தேஷ் என்பதற்கு நிலம், நாடு என்றும் முகா என்பதற்கு தலைவர் என்று பொருள். பொதுவாக ஒரு மாவட்ட அளவிலான பகுதியின் தலைவர் என்று பொருளாகும்.[2]
பணிகள்
தற்கால இந்தியாவின் மகாராட்டிரம், கர்நாடகம், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம் சத்தீஸ்கர் மாநிலங்களில் வரலாற்று ரீதியாக ஆட்சியாளர்களால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புகளை வழங்கப்பட்டவரை தேஷ்முக் என்பவர்.[3][4][5]தேஷ்முக் என்பவரே அப்பகுதியில் நிலவரி வசூலித்து ஆட்சியாளருக்கு செலுத்துவது, அப்பகுதியின் காவல் மற்றும் நீதிப் பணிகளையும் ஆற்றுவார். தேஷ்முக் குடும்பத்தின் ஆண்கள் இப்பதவி பெயரை பரம்பரை பரம்பரையாக இட்டுக்கொள்வர்.[6][1]
1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் தேஷ்முக் பதவி ஒழிக்கப்பட்டதுடன், தேஷ்முக்குகள் வசம் இருந்த நிலங்கள் முழுவதும் மாநில அரசுகள் வசம் சென்றது. இருப்பினும் மும்பை போன்ற பகுதிகளில் சிலர் தேஷ்முக் என்பதை தங்கள் குடும்பப் பெயராகக் கொண்டுள்ளனர்.
Remove ads
வரலாறு
முகலாயர் மற்றும் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் தேஷ்முக் எனும் பட்டம் ஜமீந்தார் மற்றும் ஜாகீர்தார் போன்று, நிலக்கிழார்கள் வைத்துக் கொண்ட பட்டம் போன்றதே. கம்மவார் நாயுடு, ரெட்டி, வெலமா, தேசஸ்த் பிராமணர், காயஸ்தர்கள், லிங்காயத்துகள், கோலிகள் தேஷ்முக்[7]மற்றும் சில முஸ்லீம் குடும்பத்தினர் தேஷ்முக் பட்டத்துடன் வாழ்ந்தனர். [8][9] [10]
கோல்கொண்டாவை ஆட்சி செய்த குதுப் சாஹி வம்ச ஆட்சியின் போது தக்காணத்தில் தேசஸ்த் பிராமணர்களே தேஷ்முக்குகளாக இருந்தனர். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் தேஷ்முக்குகள் ஜமீந்தார் மற்றும் ஜாகீர்தார்களாக இருந்தனர்.[11]
- ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர், நெல்லூர், கர்னூல் போன்ற மாவட்டங்களில் கம்மவார்களே தேஷ்முக் எனும் பட்டத்துடன் ஜமீந்தார்களாக இருந்தனர்.[12][13]
- பிஜப்பூர் சுல்தானகத்தின் வட கர்நாடகத்தில் பெரும்பாலான மாவட்டங்களின் தேஷ்முக் பதவிகளில் தேசஸ்த் பிராமணர்கள் மற்றும் லிங்காயத்துகளே இருந்தனர்.[14][15]
- ஐதராபாத் நிசாம் ஆட்சியில் தெலங்காணா பகுதிகளில் தேசஸ்த் பிராமணர்கள், வெலமா மற்றும் ரெட்டி மக்களே தேஷ்முக் பதவியில் இருந்தனர்.[16]
குறிப்பிடத்தக்கவர்கள்
மேற்கோள்கள்
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads