தையல்காரன் (திரைப்படம்)

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தையல்காரன் (Thaiyalkaran) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் பார்த்திபன், ஐஸ்வர்யா, சாய்குமார் புடிபேடி, ஸ்ரீஜா, சார்மலி, முரளி குமார், சொக்கலிங்க பாகவதர், வாசு விக்ரம், டப்பிங் ஜானகி, கணேஷ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை எஸ். தாணு தயாரித்தார். இத்திரைப்படத்திற்கு  எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்துள்ளார். திரைப்படம் 1991 சனவரி 14 அன்று வெளியிடப்பட்டுள்ளது.[1][2]

விரைவான உண்மைகள் தையல்காரன், இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்  

பாண்டியன் (பார்த்தீபன்) ஏழை தையல்காரர். அவர் பயமற்ற தைரியமானவர். அவர் வாழும் ஊரில் கிராமமக்கள் அவரது தையரியத்தை பாராட்டினர். அக்கிராமத்தில் உள்ள காவேரி (ஐஸ்வர்யா) அவரை காதலித்தார். காவேரி ஜெயபாலின் (சசிகுமார் புடிபேடி) சகோதரி ஆவார். ஜெயபால் வசதியான ரௌடி. ஜெயபால் ஒரு மீன் சந்தையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

பிறகு, பாண்டியன் பலருக்கு உதவினார். ஒரு பெண்ணை அவரின் குடிகார கணவனிடம் இருந்தும், பிறகு பாண்டியன் முன்னர் பிரபல பாடகராக இருந்து தற்போது வறுமையில் வாடும் சொக்கலிங்க பாகவதர் (சொக்கலிங்க பாகவதர்), விபச்சாரத்திற்காக கடத்தப்பட்ட ஓர் இளம்பெண்ணான லக்ஷ்மி (சர்மிளா), வேலையற்ற போதைப்பொருளிற்கு அடிமையான வாலிபன் ஆகியோர் பாண்டியனால் காப்பாற்றபட்டவர்களாவர். இவர்களை தன் வீட்டிலே தங்கவைத்ததுடன் அவர்களை காப்பாற்ற இரவு பகலாக உழைத்தார். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

Remove ads

நடிகர்கள்

இசை

இத்திரைப்படத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்துள்ளார். 1991 ல் இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில்  உள்ள 5 பாடல்களையும் வாலி எழுதியுள்ளார்.[3][4]

மேலதிகத் தகவல்கள் வ. எண், பாடல் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads