தொல்காப்பியம் செய்யுளியல் செய்திகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தொல்காப்பியம் பொருள் அதிகாரம் வாழ்க்கைப் பாங்கினையும், அதனை வெளிப்படுத்தும் நூலின் பாங்கினையும் உணர்த்துகிறது. முதல் ஆறு இயல்கள் வாழ்க்கைப் பாங்கை உணர்த்துகின்றன. இறுதி மூன்று இயல்கள் தமிழ்நூல் நெறியை உணர்த்துகின்றன. கருத்துகள் உவமத்தால் கூறப்படும்; செய்யுளில் கூறப்படும்; மரபுநெறியைப் பின்பற்றிக் கூறப்படும் என இம் மூன்றும் கூறுகின்றன. இவற்றுள் தொல்காப்பியம் செய்யுளியல் வாழ்க்கைப் பாங்கை உணர்த்தும் செய்யுளின் இலக்கணத்தை 235 நூற்பாக்களில் விளக்குகிறது. யாப்பியல் வகை என 26 பாங்குகளும், வனப்பு என 8 வகைப் பாங்குகளும் இந்த இயலில் கூறப்படுகின்றன. [1]

Remove ads

செய்யுள் உறுப்பு [2]

  • யாப்பியல் வகை 26
  1. மாத்திரை,
  2. எழுத்து-இயல்,
  3. அசைவகை
  4. யாத்த சீர்,
  5. அடி,
  6. யாப்பு
  7. மரபு,
  8. தூக்கு,
  9. தொடை
  10. நோக்கு,
  11. பா, அளவு-இயல்
  12. திணை,
  13. கைகோள்,
  14. கூற்று
  15. கேட்போர்,
  16. களன்,
  17. காலவகை
  18. பயன்,
  19. மெய்ப்பாடு,
  20. எச்சம்
  21. முன்னம்,
  22. பொருள்,
  23. துறை
  24. மாட்டு,
  25. வண்ணம்,
  26. வனப்பு
அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு

குறிப்பு விளக்கம்

மேலதிகத் தகவல்கள் யாப்புக் குறியீடு, குறிப்பு ...
2
அடி
யாப்பு
மரபுஇவற்றில் முன்னோர் நெறியைப் பின்பற்றுதல்
தூக்கு
தொடை
3
நோக்குஓசை முதலியவற்றால் கேட்டாரை மீட்டுந் தன்னை நோக்கச் செய்யும் செய்யுளுறுப்பு (உரையாசிரியர்கள் விளக்கம்)
பாஆடை நெய்வோர் நூலைப் பாவாக ஓட்டுவது போல வரிசை வரிசையாகப் பாடலடிகளை இணைத்து ஓட்டிய முறைமை. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா. வஞ்சிப்பா, மருட்பா [7], முதலான யாப்பு நோக்குப் பாகுபாடுகளும், அங்கதம் [8] முதலான பொருள் நோக்குப் பாகுபாடுகளும்
அளவு-இயல்ஆசிரியப்பா 3-1000 அடி, குறள் வெண்பா 7 சீர், பஃறொடை வெண்பா 5-12 அடி, பரிபாடல் 5-400 அடி, பிறவற்றிற்கு வரையறை இல்லை
திணைஅகத்திணை 7, புறத்திணை 7
கைகோள்களவு, கற்பு என 2
கூற்று, கேட்போர், களம், காலவகைஅகத்திணை மாந்தர் [9]
பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறைஅகப்பொருள் பாடல்களுக்குப் பாட்டால் விளையும் பயன், பாட்டினது பொருளால் தோன்றும் நகை முதலான மெய்ப்பாடு, பாட்டின் பயன், பாட்டில் வரும் இறைச்சி முதலானவை, அகப்பொருளா புறப்பொருளா என அறிதல், அவற்றின் துறைகள் ஆகியவற்றை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று இந்த இயல் கூறுகிறது.
4
மாட்டு"அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள்முடியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை" (தொல். பொ. 522): வாக்கியத்தை முடிக்கச் சொற்கள் விலகிக் கிடந்தாலும் நெருங்கிக் கிடந்தாலும் பொருள்பொருந்தும்படி ஏற்றுக்கோத்துச் சொல்முடிவுகொள்ளும்முறை"
வண்ணம்20
வனப்பு8
Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads