தௌமியர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தௌமியர், பாண்டவர்களின் புரோகிதர் ஆவார். குந்தி மற்றும் பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பி பாஞ்சாலத்திற்கு செல்லும் வழியில், ஒரு கந்தர்வனின் அறிவுரையின்படி, தௌமியரை தங்களது புரோகிதராக வைத்துக் கொண்டனர்.[1] பின் தௌமியருடன் திரௌபதியின் சுயம்வரம் நிகழ்ச்சிக்கு பாஞ்சால அரசவைக்குச் சென்றனர்.
துரியோதனனுடன் சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர், தௌமியருடன் 12 ஆண்டுகள் காடுறை வாழ்வின் போது பாண்டவர்களுடன் தங்கினார்.இவரே சூரிய பகவானிடமிருந்து அட்சயப் பாத்திரம் பெற தருமனுக்கு மந்திரங்களை உபதேசித்தவர்.
விராட பருவத்தில் ஒரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை விராடனின் அரண்மனையில் கழிக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என பாண்டவர்களுக்கு அறிவுரை வழங்கி, பின் துருபதன் நாடான பாஞ்சாலத்தில் சென்று தங்கினார்.
உத்தியோகப் பருவத்தில், சூதாட்ட விதிப்படி 12 ஆண்டு வன வாழ்வும், ஒராண்டு தலைமறைவு வாழ்வும் முடித்த பாண்டவர்களுகளுக்கு உரிய நாடு கோரி, அத்தினாபுரம் சென்று திருதராஷ்டிரனை சந்திக்க தூது சென்றார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads