நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்

இந்தியாவில் கோவில் From Wikipedia, the free encyclopedia

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்
Remove ads

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் (Anjaneya Temple, Nanganallur) என்பது சென்னை நங்கநல்லூரில் அனுமானுக்கு கட்டடபட்டுள்ள ஓர் இந்து கோயிலாகும்.[1] முப்பத்தி இரண்டு அடி உயர அனுமானினின் சிலை ஒற்றை கருங்கல்லில் செதுக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி அருகிலுள்ள பஞ்சவாத்திக்கு அடுத்தபடியாக இரண்டாவது உயரமான அனுமான் சிலையாகும்.

விரைவான உண்மைகள் ஆஞ்சநேயர் கோயில், பெயர் ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 37 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°59'10.7"N, 80°11'39.7"E (அதாவது, 12.986294°N, 80.194370°E) ஆகும்.

வரலாறு

1989ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அனுமன் சிலை 1995இல் நிறுவப்பட்டது. ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர்களைக் கொண்ட ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் அறக்கட்டளை இந்த கோவிலை அமைக்க விரும்பியது. காஞ்சி மடத்தைச் சேர்ந்த சந்திரசேகர சரசுவதி சிவாமிகள் 1989ஆம் ஆண்டில் 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை பிரதிட்டை செய்து 1995ஆம் ஆண்டில் குடமுழுக்கை நிறைவு செய்தார்.

கோயில்

கோயிலின் பிரதான சன்னதியில் ஆஞ்சநேயர் உள்ளார். இவர் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் என்று பெயர் சூட்டபட்டுள்ளார். இந்த ஆஞ்சனேயர் மேற்கு நோக்கி அமைந்துள்ளார். எனவே முக்கிய நுழைவாயில் மேற்கில் உள்ளது. கோயில் திருவிழாக்களின் போது பயன்படுத்த தெற்கு பக்கத்தில் ஒரு துணை நுழைவாயில் உள்ளது. பிரதான கோயில் கட்டிடத்தில் கருவறையைச் சுற்றி பாதைகள் உள்ளன. மேலும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காகவும் தெய்வத்தின் முன் கூடுவதற்கும் ஒரு பெரிய மண்டபமும் உள்ளது.

வடமேற்கு மூலையில் இராமர், சீதை, இலட்சுமணன், அனுமான் ஆகியோருக்கு ஒரு முழு அளவிலான சன்னிதி உள்ளது. தெய்வங்கள் கிழக்கு நோக்கியிருக்கின்றனர். இங்குள்ள இராமர் "கோதண்ட இராமர்" என்று அழைக்கபடுகிறார். தென்மேற்கில், ருக்மணி, சத்தியபாமா ஆகியோருடன் கிருஷ்ணருக்கு தனி சன்னிதி உள்ளது. இவையும் கிழக்கு நோக்கி உள்ளன. பொதுவாக ஆஞ்சநேய கோயில்களில் இராமருக்கு சன்னிதி கட்டப்பட்டாலும், கிருஷ்ணருக்கு சன்னிதி அரிதாகவே காணப்படும். கோயிலின் வடகிழக்குப் பகுதியில், ஒரு சிறிய மேடையில், "பிள்ளையார்" கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இதன் இடதுபுறத்தில் மற்றொரு மேடையில் "நாகர்" வழிபாட்டிற்கான தெய்வம் நிறுவப்பட்டுள்ளது. துறவி இராகவேந்திரா சன்னிதி கிருஷ்ணருக்கு எதிராக நிறுவப்பட்டுள்ளது. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.

நிருவாகம்

1995ஆம் ஆண்டு கட்டப்பட்டதிலிருந்து இந்த கோயில் ஸ்ரீ மாருதி பக்த சமாஜம் எனும் தனியார் அறக்கட்டளைகளால் நடத்தப்பட்டது. கோயில், அறக்கட்டளையின் நிர்வாகத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்து பல புகார்களும் மனுக்களும் வந்தன தமிழ்நாடு அரசுக்கு வந்தன. இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் 2013 சூலை முதல் கோயிலின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத் துறை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது.[2] இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

Remove ads

பூசைகள்

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] மார்கழி மாதம் அனுமன் ஜெயந்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் ஸ்ரீ ராம நவமி திருவிழாவாக நடைபெறுகிறது.

நடை திறப்பு நேரம்

  • காலை: 05.00 முதல் 12.00 மணி வரை
  • மாலை: 04.30 முதல் 09.00 மணி வரை[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் வாசிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads