நந்தனா (நடிகை)

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

நந்தனா (Nandana) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2000களில் மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களிலும், துணை வேடங்களிலும் நடித்தார். இவர் 2002-இல் வெளியான சிநேகிதன் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

விரைவான உண்மைகள் நந்தனா, தேசியம் ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

நந்தனா கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திருவண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் 2006 நவம்பர் 19 அன்று தமிழ் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜாவை மணந்தார். சாதுர்யன் என்ற திரைப்படத்தில் மனோஜுடன் இணைந்து நடித்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படத் துறையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர்களுக்கு ஆர்த்திகா, மதிவதனி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் மனோஜ் பாரதிராஜா 2025 மார்ச் 25 அன்று மாரடைப்பால் இறந்தார்.[1]

Remove ads

திரைப்படத்துறை

நந்தனா 2002 இல் வெளிவந்த சிநேகிதன் என்ற மலையாளத் திரைப்படத்தில், மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். 2003-இல் தமிழில் வெளியான சக்சஸ் என்ற திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ஏபிசிடி, கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.[2]

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படங்கள் ...

விளம்பரங்களில்

  • சிறீதேவி டெகஸ்டைல்ஸ்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads