நயாகட்

From Wikipedia, the free encyclopedia

நயாகட்map
Remove ads

நயாகட் (Nayagarh), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள நயாகட மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரானபுவனேசுவரத்திற்கு தென்மேற்கே 83.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் பூரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டது. இது கடல்மட்டத்திற்கு 178 மீட்டர் (584 அடி) உயரத்தில் உள்ளது.

விரைவான உண்மைகள் நயாகட் நயாகர், நாடு ...
Thumb
தக்கினகாளி கோயில், நயாகட்
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், குடியிருப்புகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 17,030 ஆகும். அதில் 9,000 ஆண்கள் மற்றும் 8,030 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8.88 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.33 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 9.20 % மற்றும் 1.22 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 98.16%, இசுலாமியர் 1.17%, கிறித்தவர்கள் 0.28% மற்றும் பிற சமயத்தினர் 0.39% வீதம் உள்ளனர்.[1]

Remove ads

போக்குவரத்து

தொடருந்து நிலையம்

இரண்டு நடைமேடைகள் கொண்ட நயாகட் தொடருந்து நிலையத்திலிருந்து[2]தாசபல்லா[3], புவனேசுவரம், புரி, பத்ரக் ஆகிய நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads