வடோதரா மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடோதரா மாவட்டம் அல்லது பரோடா மாவட்டம் (Vadodara District) இந்தியாவின் மேற்கே குசராத்து மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். அமைந்துள்ளது. இம்மாவட்ட தலைமையிடம் வடோதரா (பரோடா) ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 7,794 km², மக்கட்தொகை 3,641,802.[3] பரணிடப்பட்டது 2015-04-25 at the வந்தவழி இயந்திரம்பரோடா, பிரித்தானிய இந்தியா காலத்தில் பம்பாய் மாகாணத்தில், வதோதரா பகுதி சமஸ்தானங்கள் நாடாக இருந்தது.

Remove ads
மாவட்ட எல்லைகள்
வடக்கே தகோத் மாவட்டம், பஞ்சமகால் மாவட்டமும், மேற்கே ஆனந்த் மாவட்டம், கேதா மாவட்டமும், தெற்கே நர்மதா மாவட்டம், பரூச் மாவட்டம், கிழக்கே மத்தியப் பிரதேசம் வடோதரா மாவட்ட எல்லைகளாக அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் குறுக்கே மாஹி ஆறு பாய்கிறது. பரோடா, பிரித்தானிய இந்தியா காலத்தில் பம்பாய் மாகாணத்தின் ஒரு மன்னராட்சி நாடாக இருந்தது.
நிலவியல் அமைப்பு
முதன்மை நகரமான வடோதரா விஸ்வாமித்ரி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. வதோதாராவின் தெற்கே நர்மதா ஆறும், வடக்கே மாஹி ஆறும் பாய்கிறது.
வானிலை (Climate)
வடோதரா மாவட்டம் வறண்ட வானிலையுடன், கோடை, குளிர், மழைக்காலம் என மூன்று வானிலை கொண்டது.
Remove ads
பொருளாதாரம்
வடோதரா நகரம் தொழில் வளர்ச்சியில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. வேதியல் பொருட்கள், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள், பஞ்சாலை தொழில், இயந்திர தளவாட ஆலைகள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், உரத் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டுள்ளது.
கோட்டங்கள்
- வடோதரா
- டப்போய்
வட்டங்கள்
- டப்போய்
- கர்ஜண்
- பாத்ரா
- சாவ்லி
- சினோர்
- வடோதரா நகரம்
- வடோதரா கிராமப்புறம்
- வாகோடியா
இம்மாவட்டத்திலிருந்த கான்பூர், கதானா, சந்திரம்பூர், லூனாவாடா, பலாசினார் ஆகிய ஐந்து வட்டங்கள் புதிதாக துவக்கப்பட்ட மகிசாகர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து
வடோதரா நகரத்தில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் தொடருந்து வண்டிகளும், பேருந்துகளும் செல்கின்றன.
மக்கள் பரம்பியல்
2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கட்தொகை 4,157,568 ஆகும்.[3][3] மக்கட்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 551 மக்கள் என்ற விகிதத்தில் உள்ளது.[3] 2001 முதல் 2011 முடிய பத்தாண்டுகளில் மக்கட்தொகை 14.16% கூடியுள்ளது.[3] ஆயிரம் ஆண்களுக்கு 934 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது.,.[3] கல்வியறிவு 81.21% ஆக உள்ளது.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads