நல்லாம்பட்டி

நல்லாம்பட்டி, இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்திலுள்ளபேரூராட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

நல்லாம்பட்டி (ஆங்கிலம்:Nallampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டடத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு கரும்பு , நெல், மஞ்சள் ஆகிய பயிர்கள் விளைகின்றன.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

நல்லாம்பட்டி பேரூராட்சிக்கு கிழக்கில் 26 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் கோபிச்செட்டிப்பாளையம் 20 கி.மீ.; வடக்கில் பவானி 20 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 12 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

3.6 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 24 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,152 வீடுகளும், 3,874 மக்கள்தொகையும் கொண்டது. [4]


ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads