பெருந்துறை

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

பெருந்துறைmap
Remove ads

பெருந்துறை (ஆங்கிலம்:Perundurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை வட்டம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது. பெருந்துறை நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்
Remove ads

முக்கிய சாலைகள்

  • கோவை சாலை
  • ஈரோடு சாலை
  • பவானி சாலை
  • குன்னத்தூர் சாலை
  • சென்னிமலை சாலை
  • பழைய பேருந்து நிலைய சாலை
  • வெள்ளோடு சாலை
  • காஞ்சிகோவில் சாலை

அமைவிடம்

ஈரோடு மாநகரின் தென்மேற்குப் பகுதியில் பெருந்துறை அமைந்துள்ளது. ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், ஈரோடு சந்திப்பிலிருந்தும் சுமார் 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

23.39 ச.கி.மீ. பரப்பளவும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,675 வீடுகளும், 24,930 மக்கள்தொகையும் கொண்டது. [5]

பொருளாதாரம் - தொழில்வளம்

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) (சிப்காட்) எனப்படும் தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்துக்கான சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பொறியியல் தயாரிப்புகளுக்கான சிறப்பு பொருளாதார மண்டலமும் இங்கு அமைந்துள்ளது. இங்கு பின்னலாடை தொழில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சேலம்-ஈரோடு-கோயம்புத்தூர்-கொச்சியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 544ன் புறவழிச்சாலை இந்தப் பகுதி வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது.

Remove ads

கல்வி

பள்ளிகள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளி
  • சாகர் பன்னாட்டுப் பள்ளி
  • ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
  • காருண்யா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கல்லூரிகள்

வழிபாட்டுத் தலங்கள்

1.பெருந்துறை முனியப்பசாமி கோயில்

2. கோட்டை மாரியம்மன் கோயில்

3. சோழீசுவரர் கோயில்

4. செல்லாண்டியம்மன் கோயில்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads