நாகார்ஜுன சாகர் அணை தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்கட்டு (கல்லணை) அணையாகும் (masonry dam). இதுவே உலகத்தின் மிக உயரமான கல்கட்டு அணையாகும். இதன் உயரம் 124 மீட்டர்.
விரைவான உண்மைகள் நாகார்ஜுன சாகர் அணை, அமைவிடம் ...
நாகார்ஜுன சாகர் அணை |
---|
 |
Show map of ஆந்திரப் பிரதேசம் இந்தியாவில் நாகார்ஜுன சாகரின் அமைவிடம்-இல் நாகார்ஜுன சாகர் அணையின் அமைவிடம் Show map of இந்தியா |
அமைவிடம் | நல்கொண்டா மாவட்டம், தெலங்காணா மற்றும் பாலநாடு மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
---|
புவியியல் ஆள்கூற்று | 16°34′32″N 79°18′42″E |
---|
நோக்கம் | நீர் மின் ஆற்றல் & நீர்ப்பாசனம் |
---|
கட்டத் தொடங்கியது | 10 டிசம்பர் 1955 (1955-12-10) |
---|
திறந்தது | 1967 |
---|
கட்ட ஆன செலவு | 132.32 கோடி ரூபாய் |
---|
அணையும் வழிகாலும் |
---|
தடுக்கப்படும் ஆறு | கிருட்டிணா ஆறு |
---|
உயரம் | 124 மீட்டர்கள் (407 அடி) ஆழமான ஆற்றின் படுகை மட்டத்திலிருந்து |
---|
நீளம் | 1,550 மீட்டர்கள் (5,085 அடி) |
---|
நீர்த்தேக்கம் |
---|
உருவாக்கும் நீர்த்தேக்கம் | நாகார்ஜுன சாகர் நீர்த்தேக்கம் |
---|
மொத்தம் கொள் அளவு | 11.56 km3 (9×10^6 acre⋅ft) (405 Tmcft) |
---|
செயலில் உள்ள கொள் அளவு | 6.92 கன சதுர கிலோமீட்டர்கள் (1.66 cu mi) (244.41 Tmcft)[1] |
---|
நீர்ப்பிடிப்பு பகுதி | 215,000 சதுர கிலோமீட்டர்கள் (83,000 sq mi) |
---|
மேற்பரப்பு பகுதி | 285 km2 (110 sq mi) |
---|
மின் நிலையம் |
---|
இயக்குனர்(கள்) | ஆந்திரப் பிரதேச மின் உற்பத்தி கழகம்தெலங்காணா மாநில மின் உற்பத்தி கழகம் லிமிடெட் |
---|
பணியமர்த்தம் | 1978–1985 |
---|
சுழலிகள் | 1 x 110 MW பிரான்சிஸ் சுழலி, 7 x 100.8 MW எதிர்ப்புறமாகத் திருப்பத் தக்க பிரான்சிஸ் சுழலிகள் |
---|
நிறுவப்பட்ட திறன் | 816 MW (1,094,000 hp) |
---|
மூடு
இந்தியாவில் தொடங்கப்பட்ட பாசன மற்றும் நீர் மின் திட்டங்களில் இது தொடக்ககால திட்டங்களில் ஒன்றாகும். நலகொண்டா மாவட்டம், பிரகாசம் மாவட்டம், கம்மம் மாவட்டம், குண்டூர் மாவட்டம் ஆகியவை இவ்வணையினால் பாசன வசதி பெறுகின்றன.
1955 ம் ஆண்டு இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு இத்திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இவ்வணை கட்டுமானத்தினால் பல ஆதி புத்த குடியேற்ற இடங்கள் நீரில் மூழ்கின. இவ்வணையில் நீரை தேக்குவதற்கு முன் பல புத்த நினைவு சின்னங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடங்களில் வைக்கப்பட்டன.