நானா பட்நாவிசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நானா பட்நாவிசு (Nana Phadnavis) (பிப்ரவரி 12, 1742 - மார்ச் 13, 1800) பாலாஜி ஜனார்தன் பானு என்ற பெயரில் பிறந்த இவர், இந்தியாவின் புனேவில் பேஷ்வா நிர்வாகத்தின் போது மராட்டிய பேரரசின் செல்வாக்கு மிக்க அமைச்சராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். இவரை ஐரோப்பியர்கள் மாராட்டிய மாக்கியவெல்லி என்று அழைத்ததாக வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் கிராண்ட் டஃப் கூறுகிறார்.[1]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
இவர் 1742 இல் சதாராவில் ஒரு சித்பவன் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு 'நானா' என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. இவரது தாத்தா பாலாஜி மகாத்ஜி பானு முதல் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் பட் அந்நாட்களில் சிறீவர்தனுக்கு அருகிலுள்ள வேலாசு என்ற கிராமத்திலிருந்து குடிபெயர்ந்தார். பட்களும், பானு குடும்பமும் நல்ல உறவுகளைக் கொண்டிருந்தன. அவர்களுக்கு இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. இரண்டு குடும்பங்களும் முறையே வேலாசு மற்றும் சிறீவர்தன் நகரங்களின் 'மகாஜன்' அல்லது கிராமத் தலைமை பதவிகளைப் பெற்றன. பாலாஜி மகாத்ஜி ஒருமுறை முகலாயர்களின் கொலைகார சதித்திட்டத்திலிருந்து பேஷ்வாவைக் காப்பாற்றியிருந்தார். எனவே பேஷ்வா சாகுஜி பானு மீது பட்னாவிசு (அஷ்டபிரதானில் ஒருவர்) என்ற பட்டத்தை வழங்க பரிந்துரைத்தார். பின்னர், பேஷ்வா உண்மையான மாநிலத் தலைவரானபோது, தனது ஆட்சியின் போது மராட்டிய சாம்ராச்சியத்திற்கான நிர்வாகம் மற்றும் நிதி ஆகியவற்றின் முக்கிய இலாகாக்களை வைத்திருந்த பிரதான அமைச்சரானார்.
இவர், பாலாஜி மகாத்ஜி பானுவின் பேரன் ஆவார். மேலும் இவரது தாத்தாவின் பெயரை மரபுப்படி வைத்திருந்தார். பேஷ்வா இவரை தனது குடும்ப உறுப்பினர் போலவே நடத்தினார். இவரது மகன்களான விஸ்வாஸ்ராவ், மாதவராவ், நாராயணராவ் ஆகியோருக்கு கல்வியிலும், இராஜதந்திர பயிற்சியின் அதே வசதிகளையும் வழங்கினார்.
Remove ads
பேஷ்வா நிர்வாகம்

1761 ஆம் ஆண்டில், இவர் மூன்றாம் பானிபட் போரிலிருந்து புனேவுக்குத் தப்பிச் சென்றார். பின்னர், மராட்டிய கூட்டமைப்பின் விவகாரங்களை வழிநடத்தும் ஒரு முன்னணி நபராக ஆனார். இருப்பினும் இவர் ஒருபோதும் ஒரு சிப்பாய் அல்ல. அது ஒரு அரசியல் உறுதியற்ற காலமாக இருந்தது. உள்நாட்டு பிளவு மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் வளர்ந்து வரும் சக்திக்கு மத்தியில் மராத்தா கூட்டமைப்பை ஒன்றாக வைத்திருப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.

இவரது நிர்வாக, இராஜதந்திர மற்றும் நிதித் திறன்கள் மராட்டிய சாம்ராச்சிய்த்திற்கு செழிப்பைக் கொடுத்தன. மேலும் இவர் வெளிவிவகாரங்களை நிர்வகிப்பது மராட்டிய பேரரசை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் உந்துதலிலிருந்து விலக்கி வைத்தது. ஐதராபாத்தின் நிஜாம், ஐதர் அலி, மைசூரின் திப்பு சுல்தான் மற்றும் ஆங்கில இராணுவத்திற்கு எதிராக மராட்டிய படைகள் வென்ற பல்வேறு போர்களில் இவர் தனது சிறந்த போர் திறன்களை வெளிப்படுத்தினார்.
1773 இல் பேஷ்வா நாராயணராவ் படுகொலை செய்யப்பட்ட பின்னர், இவர் பார்பாய் அரசப் பிரதிநிதி என்று அழைக்கப்படும் பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஆட்சிக்குழுவின் உதவியுடன் மாநில விவகாரங்களை நிர்வகித்தார்.
Remove ads
மெனாவலி அரண்மனை


பிரபலமான கலாச்சாரத்தில்
- 1994 ஆம் ஆண்டு இந்தித் தொலைக்காட்சித் தொடரான தி கிரேட் மராத்தாவில், நானாவின் கதாபாத்திரம் ஹரியோம் பராஷரால் சித்தரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads