நான்யதேவன்
மிதிலையின் அரசன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான்யதேவன் (Nanyadeva)[1] மிதிலைப் பிரதேசத்தின் கர்னாட் வம்சத்தின் நிறுவனர் ஆவார். இவர் அரிசிம்மதேவனின் மூதாதையரும், சுகேல்தேவனின் வழித்தோன்றலும் ஆவார். இவர் தனது தலைநகரை சிம்ரௌங்காத்தில் நிறுவி, மிதிலைப் பகுதியை 50 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் தனது தாராள மனப்பான்மை, தைரியம் மற்றும் அறிஞர்களின் ஆதரவிற்காக அறியப்பட்டவர். இவர் கர்னாட் சத்திரிய கௌல சைவ குலத்தைச் சேர்ந்தவர். பொது ஊழி 1097 இல் சிம்ரௌங்காத்திலிருந்து மிதிலையை ஆட்சி செய்யத் தொடங்கினார். சிம்ரௌங்காத் மற்றும் நேபாள வம்சாவளி நூல்களில் [2] காணப்படும் ஆதாரங்கள், இவர் சாலிவாகன ஆண்டு 1019 (ஜூலை 10, 1097) இல் ஒரு சிரவண மாதத்தித்தில் (ஆவணி) ஒரு சனிக்கிழமையின் சிம்ம இலக்னத்திலும், திதி சுக்ல ஏழிலும், நட்சத்திர சுவதியிலும் அரியணை ஏறினார் என்று தெளிவாகக் கூறுகிறது. [3]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
11 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வடக்கின் சாளுக்கிய படையெடுப்புகளின் ஒரு பகுதியாக நான்யதேவன் இப்பகுதிக்கு வந்ததாக நம்பப்படுகிறது. சாளுக்கியர்களுடன் பல இராணுவத் தளபதிகள் வந்திருக்கலாம். அவர்கள் வட பீகாரில் தங்களுக்கு சொந்தமான சிறிய நிலப்பகுதிகளை ஆண்டு வந்திருக்கலாம். அவர்களில் நான்யதேவனும் ஒருவராக இருந்திருப்பார். [4] இவரது அசல் கோட்டை நவீன பீகாரின் சம்பாரன் மாவட்டத்தில் உள்ள நானாபுரம் ஆகும். ஆனால் பின்னர் இவர் தனது தலைநகரை நவீன நேபாளத்தில் உள்ள சிம்ரௌங்காத்திற்கு மாற்றினார். இது கர்னாட் வம்சத்தின் இறுதி வரை முக்கிய தலைநகராக இருந்தது. [5]
Remove ads
மிதிலையின் ஆட்சி
வித்யாபதியின் புருஷ் பரிக்சா எனும் கவிதை நூலில் நான்யதேவன் கி.பி. 1097 இல் மிதிலையின் கட்டுப்பாட்டைப் பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டது. இவரது ஆட்சியின் போது, மிதிலை வங்காளத்தின் காம்போஜ பால வம்சத்துடன் மோதலில் ஈடுபட்டது. [6]
மரபு
பல நவீன அறிஞர்கள் மற்றும் இப்பகுதி மக்கள், விதேக முடியாட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இப்பகுதியை விடுவித்த நான்யதேவனை "மிதிலையின் மகன்" என்று கருதுகின்றனர். வெளியில் இருந்து ஆட்சி செய்த பிறரைப் போலல்லாமல், மிதிலையிலேயே தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தியதால் கர்னாட் ஆட்சி அந்நியமாகப் பார்க்கப்படவில்லை. [7] இவருக்குப் பின் கங்கதேவன் மற்றும் மல்லதேவன் என்ற இவரது இரு மகன்கள் ஆட்சிக்கு வந்தனர். [8]
இலக்கியப் படைப்புகள்
இவர் பல மெல்லிசைகளை உருவாக்கினார். மேலும், சரஸ்வதி கிருதயலங்காரா மற்றும் கிரந்த-மகர்ணவா என்று அழைக்கப்படும் சமசுகிருத இசை ஆய்வுக் கட்டுரையில் தனது இசையறிவைப் பதிவு செய்தார். [9] இந்த படைப்புகள் வெவ்வேறு இசைக் குறிப்புகளின் ஆழமான மதிப்பீடாகும். மேலும் அவை வீரம் முதல் கோபம் வரை சில உணர்வுகளை வெளிபடுத்துகிறது. மிலையின் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து இவர் இந்தப் பணிகளை முடித்தார்.
சந்ததியினர்
கர்னாட் பேரரசின் வீழ்ச்சி மற்றும் அதிகார வெற்றிடத்திற்குப் பிறகு, துக்ளக்குகளின் ஆதரவுடனும் பாதுகாப்புடனும் மைதிலி பிராமணர்கள் அரியணைக்கு வந்து ஆயின்வார் வம்சத்தை உருவாக்க முடிந்தது. கர்னாட்டுகள் முக்கியமாக இரண்டு கிளைகளாகப் பிரிந்து, நேபாளத்திற்குத் தப்பிச் சென்று மல்லர் வம்சத்தை உருவாக்கினர். மேலும், மிதிலையில் தங்கியிருப்பதைத் தேர்ந்தெடுத்து, புதிய ஆட்சியாளர்களால் (வரி வசூல் மற்றும் நிர்வாகம்) ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தொழிலை ஏற்றுக்கொண்டனர். கர்ண கயஸ்தர்கள் (மிதிலையின் 32 காமாக்கள் அல்லது கிராமங்களில் குடியேறினர்). புதிய ஆளும் உயரடுக்கு "தாக்குரா" என்ற அவர்களின் முறையான மூதாதையர் பட்டத்தை கலைத்து, அதை தங்களுக்கு சொந்தமாக்கியது. மேலும், லால் தாஸ், வர்மா, மல்லிக், காந்த், கர்ணன் போன்ற அரசர் அல்லாத பட்டங்களை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது. காட்மாண்டுவின் மல்ல வம்சத்தின் பிரதாப் மல்லனும் நான்யதேவனை அறிவித்தார். [10]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads