கர்னாட் வம்சம்

இந்தியாவை ஆண்ட பண்டைய அரச குலம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கர்னாட் அல்லது கர்னாட வம்சம் ( Karnata dynasty ) என்பது கிபி 1097 இல் நான்யதேவனால் நிறுவப்பட்ட ஒரு வம்சமாகும். நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் உள்ள சிம்ரௌங்காத் மற்றும் பீகாரின் தர்பங்கா ஆகிய இரண்டு தலைநகரங்கள் வம்சத்திற்கு இருந்தன. இது கங்கதேவனின் ஆட்சியின் போது இரண்டாவது தலைநகராக மாறியது.[1] இந்தியா மற்றும் நேபாளத்தின் பீகார் மாநிலத்திலுள்ள திருஹட் அல்லது மிதிலை பிரதேசம் என்று நாம் இன்று அறியும் பகுதிகளை இந்த இராச்சியம் கட்டுப்படுத்தியது. இப்பகுதி கிழக்கில் மகாநந்தா ஆறு, தெற்கில் கங்கை, மேற்கில் கண்டகி ஆறு மற்றும் வடக்கில் இமயமலை எல்லையாக இருந்தது.[2][3] கர்னாட்டுகளின் கீழ், மிதிலை 1097 முதல் 1324 வரை கிட்டத்தட்ட முழு இறையாண்மையைக் கொண்டிருந்தது.[4]

விரைவான உண்மைகள் மிதிலையின் கர்னாட்கள்கர்னாட் வம்சம், தலைநகரம் ...
Remove ads

வரலாறு

பிரெஞ்சு கிழக்கத்திய அறிஞரும் இந்தியவியலாருமான சில்வா லெவியின் கூற்றுப்படி, சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்ரமாதித்த்தனின் உதவியுடன் நான்யதேவன் சிம்ரௌங்கத்தின் மீது தனது மேலாதிக்கத்தை நிறுவியதாக அறியமுடிகிறது.[5][6][7] கிபி 1076 இல் ஆறாம் விக்ரமாதித்தனின் ஆட்சிக்குப் பிறகு, காம்போஜ பால வம்சம் மற்றும் சென் வம்சத்திற்கு எதிரான வெற்றிகரமான இராணுவப் போர்களை இவர் வழிநடத்தினார்.[8][9]அரிசிம்மதேவனின் ஆட்சியின் போது, கர்னாட்டுகள் தளபதியும் அமைச்சருமான காண்டேசுவர தக்குராவின் தலைமையில் கர்னாட் இராணுவத்துடன் நேபாளத்தில் தாக்குதல்களை நடத்தினர்.[10]

Remove ads

கலைகளின் எழுச்சி

கர்னாட்களின் கீழ், மிதிலை போர்கள் ஏதுமில்லாமல் ஓரளவு அமைதியாகவே இருந்தது. எனவே எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் அரச ஆதரவைப் பெற முடிந்தது. இக்காலத்தில் புதிய இலக்கியங்களும், நாட்டுப்புறப் பாடல்களும் உருவாக்கப்பட்டதால் மைதிலி மொழி வலுவாக வளர்ந்தது. தத்துவஞானி, கங்கேச உபாத்யாயா, நவ்ய-நியாய சிந்தனைப் பள்ளியை அறிமுகப்படுத்தினார். இது 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் செயலில் இருந்தது. மக்களின் பொதுவான மத அணுகுமுறை பழமைவாதமாக இருந்தது. மேலும் மைதிலி பிராமணர்கள் அரசவையில் ஆதிக்கம் கொண்டிருந்தனர். [11] இச்சமயத்தில் ஜோதிரீசுவர் தாக்கூரின் வர்ண ரத்னாகரம் எனும் நூல் அரிசிம்மதேவனின் ஆட்சியின் போது இயற்றப்பட்டது.

Remove ads

பிற்கால கர்னாட்டுகள்

அரிசிம்மதேவன் மிதிலையை விட்டு வெளியேறிய பிறகு, கர்னாட் மன்னர்கள் 15 ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியின் சில பகுதிகளை ஆட்சி செய்ததற்கான சான்றுகள் உள்ளன. அதே நேரத்தில் ஆயின்வார் வம்சத்தினர் மிதிலையின் மத்திய பகுதிகளை கட்டுப்படுத்தினர். சம்பாரனில், பிருத்விசிம்மதேவன் மற்றும் மதன்சிம்மதேவன் உள்ளிட்ட அவரது வாரிசுகள் ஆட்சி செய்தனர். அவர்களின் எல்லை கோரக்பூர் மாவட்டம் வரை பரவியது. பிருத்விசிம்மதேவன் அரிசிம்மதேவனின் வழித்தோன்றலாகக் கருதப்பட்டார். சர்வசிம்மதேவன் என்ற ஆட்சியாளரைக் குறிக்கும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சஹர்சா மற்றும் மாதேபுரா மாவட்டங்களில் கர்னாட் வம்சத்தின் மற்ற எச்சங்களும் காணப்பட்டன. [12]

சந்ததியினர்

தனது தோல்விக்குப் பிறகு, அரிசிம்மதேவன் காட்மாண்டுவுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவரது சந்ததியினர் காத்மாண்டுவின் மல்லர் வம்சத்தை நிறுவினர். மல்லர்கள் மைதிலி மொழியின் சிறந்த புரவலர்களாகக் குறிப்பிடப்பட்டனர். [13]

கர்னாட்டுகளின் மற்றொரு பிரிவினர் மிதிலையில் இருந்ததாகவும், அவர்களின் வழித்தோன்றல்கள் வட பீகாரின் கந்தவாரிய ராஜபுத்திரர்களாகவும் ஆனதாகவும் அவர்கள் இப்பகுதியில் பல தலைமைகளை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. [14] [15]

Remove ads

கட்டிடக்கலை

Thumb
சிம்ரௌங்காத்தில் இருந்து பிரம்மா சிலை மீட்கப்பட்டது

கர்னாட் வம்சத்துடன் தொடர்புடைய கல்வெட்டுகள் மற்றும் கலைப்பொருட்கள் மிதிலைப் பகுதி முழுவதும் சிம்ரௌங்காத் மற்றும் தர்பங்கா ஆகிய இரண்டு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிம்ரௌங்காத்தில் இருந்து, பால-சென் கலையை ஒத்த சிற்பத்தூண் மீட்கப்பட்டுள்ளன. கலாச்சார பரிமாற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட அண்டை நாடுகளாக இருந்ததால், இராச்சியங்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக இருக்கலாம். இந்த கல்தூண்களில் பல பல்வேறு இந்து தெய்வங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பீகாரின் ஆபரண உற்பத்தியின் சிறப்பியல்பை நாம் அறிய முடிகிறது. [16]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads