நான் சிரித்தால்

2020 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நான் சிரித்தால்
Remove ads

நான் சிரித்தால் (Naan Sirithal) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை அறிமுக இயக்குநர் ராணா எழுதி இயக்கியுள்ளார்.[1][2] மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் சி. ஆதியின் மூன்றாவது படத்தை தயாரித்தார். இது மூன்றாவது தொடர் வெற்றியையும் ஈட்டியது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா, ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க, கே. எஸ். ரவிக்குமார் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார். படவா கோபி மற்றும் எரும சாணி விஜய் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது ராணாவின் குறும்படமான கெக்க பெக்க கெக்க பெக்கவின் திரைப்படப் பதிப்பாகும்.[3] படம் 2020 பெப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது.[4]

விரைவான உண்மைகள் நான் சிரித்தால், இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட காந்தி (ஹிப்ஹாப் தமிழா) எந்த வகையான உணர்ச்சி என்றாலும் சிரித்துவிடுவார். இதனால் தன் காதல், வேலை போன்றவற்றை இழக்கிறார். இதனால் காந்தியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து எப்படி காந்தி தப்பினான் என்பதே கதை

நடிப்பு

  • ஹிப்ஹாப் தமிழா காந்தி, நரம்பியல் கோளாரால் சிரிப்பு நோயால் அவதிப்படும் மனிதர்
  • ஐஸ்வர்யா மேனன் அங்கிதா சிரேஷ்
  • கே. எஸ். ரவிக்குமார் தில்லிபாபு
  • ரவி மரியா சக்ரதாஸ்
  • ஷா ரா நெல்சன்
  • முனீஷ்காந்த் ராமதாஸ் மாணிகம்
  • பாண்டியராஜன் மனநல மருத்துவர் வீரபாத்திரன்
  • படவா கோபி காந்தியின் தந்தை கோபியாக
  • சுஜாதா சிவக்குமார் காந்தியின் தாயாக
  • யோகி பாபு காந்தியின் நண்பர் டில்லி பாபு
  • ஜி. மாரிமுத்து அமைச்சர் தங்கதுரை
  • எரும சாணி விஜய் காந்தியின் நண்பர் தியாகு
  • விச்சு விசுவநாத் அன்பு
  • டி. ஆர். கே. கிரண் பெருமாள்
  • புட் சட்னி ராஜ்மோகன் காந்தியின் வேலைக்காரனும் ஜூலியின் சகோதரனுமான மனோஜ்
  • லல்லு ரோஹித், காந்தியின் கல்லூரி நண்பர்
  • மரியா ஜூலி டில்லி பாபுவின் முன்னாள் காதலி, மனோஜின் தங்கை
  • அர்ச்சணா சந்ரோக்
  • ரேகா சுரேஷ் அங்கிதாவின் தாய்
  • அருள் டி. அங்கிதாவின் தந்தை சங்கர்
  • மூணார் ரமேஷ் ரவி
  • புதுப்பேட்டை சுரேஷ் கலெக்சன் சேகர்
  • சத்திய குரமன் காந்தியின் அடியாள்
  • கிசோர் ராஜ்குமார் டில்லிபாபுவின் அடியாள்
  • விஜே ஆஷிக் ஜுலியின் முன்னாள் ஆண் நண்பர்
  • தீபக்ராஜ் குணசேகரன் ஒலா வண்டி ஒட்டுநர்
  • தளபதி தினேஷ் பவுள் ராஜ்
  • லொல்லு சபா ஈஸ்டர் காந்தியின் அண்டை வீடுக்காரர்
  • ஸ்ரீநாத் (சீனிவாசன்)
  • கௌதமி வீரபத்திரனின் பக்கத்து வீட்டுக்காரர்
Remove ads

தயாரிப்பு

படத்தின் முதன்மை படப்பிடிப்பு 2019 சூலையில் தொடங்கி, 2019 திசம்பர் 4 வரை நீடித்தது.[5] இப்படத்தின் வழியாக ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் சுந்தர் சி. ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்தனர்.

இசை

இப்படத்திற்கான பாடல் வரிகளை ஹிப்ஹாப் தமிழா, கபிலன் வைரமுத்து, அறிவு ஆகியோர் எழுதினர். பாடல் இசை, பின்னணி இசை ஆகியவற்றை ஹிப்ஹாப் தமிழா அமைத்தார். படத்தின் முதல் தனிப்பாடலான "பிரேக் அப் பாடல்" 2019 திசம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது.[6] இரண்டாவது ஒற்றை பாடல் "தோம் தோம்" 2019 திசம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது. மூன்றாவது ஒற்றை பாடல் "அஜக்கு குமுக்கு" 2020 சனவரி 11 அன்று வெளியிடப்பட்டது. நான்காவது தனிப்பாடல் "ஹேப்பி பர்த்டே" 2020 சனவரி 25 அன்று வெளியிடப்பட்டது.

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
Remove ads

வெளியீடு

இப்படம் 2020 பெப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads