நாரவாரிக்குப்பம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாரவாரிக்குப்பம் (ஆங்கிலம்:Naravarikuppam), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 18 வார்டுகளும், 110 தெருக்களும், 15,621 வீடுகளும், 62,838 மக்கள் தொகையும் கொண்ட நாரவாரிகுப்பம், சென்னைக்கு கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவள்ளூருக்கு மேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், பொன்னேரிக்கு வடக்கே 25 கி மீ தொலைவிலும், அம்பத்தூருக்கு தெற்கே 15 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 12 கி மீ தொலைவில் உள்ள பெரம்பூரில் உள்ளது.[3]
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 13.2°N 80.17°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நரவரிக்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 81%; பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நரவாரிக்குப்பம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads