நாராயண்கஞ்ச் மாவட்டம்
வங்காளதேசத்தின் டாக்கா கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாராயண்கஞ்ச் மாவட்டம் (Narayanganj District) (Bengali: নারায়ণগঞ্জ জেলা தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நாராயண்கஞ்ச் நகரம், நாட்டின் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ளது. இம்மாவட்டம் 15 பிப்ரவரி 1984-இல் துவக்கப்பட்டது. [1]


Remove ads
மாவட்ட எல்லைகள்
நாராயண்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் நரசிங்கடி மாவட்டம் மற்றும் பிரம்மன்பரியா மாவட்டமும், தெற்கில் முன்சிகஞ்ச் மாவட்டமும், மேற்கில் கொமில்லா மாவட்டமும், மேற்கில் டாக்கா மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
684.37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக நாராயணன்கஞ்ச் சதர், பந்தர், ரூப்கஞ்ச், ஹராய்ஹசார், மற்றும் சோனார்காவ்ன் என ஐந்து துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டம் ஐந்து நகராட்சி மன்றங்களையும், நாற்பத்தி ஒன்று கிராம ஒன்றியக் குழுக்களையும், 619 வருவாய் கிராமங்களையும், 1204 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 2400 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 02 ஆகும்.
இம்மாவட்டம் இரண்டு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
Remove ads
தட்ப வெப்பம்
இம்மாவட்டத்தின் சராசரி ஆண்டு வெப்பம் 17.5° பாரன்ஹீட் ஆகவும், ஆண்டு சராசரி மழைப் பொழிவு 183 செண்டி மீட்டராகவும் உள்ளது.
பொருளாதாரம்
நாராயண்கஞ்ச் ஆற்றுத்துறைமுகம் நாட்டின் பழைமையான ஒன்றாகும். மேலும் இந்நகரம் வணிகம் மற்றும் தொழில் மையமாக உள்ளது. குறிப்பாக நாட்டின் சணல் தொழிற்சாலைகள் நெசவு ஆலைகள் மற்றும் அதன் தொடர்பான வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ளது.
இம்மாவட்டத்தில் தாலேஷ்வ்ரி ஆறு, மெக்னா ஆறு, சீதாலகா ஆறு, பூரிகங்கா முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் மிக்கதகாக உள்ளது.
இம்மாவட்டத்தில் நெல், சணல், கோதுமை, எண்ணெய் வித்துக்கள், மா, கொய்யா, வாழை போன்ற பயிர்கள் விளைகிறது. [2]
Remove ads
மக்கள் தொகையியல்
684.37 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 29,48,217 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 15,21,438 ஆகவும், பெண்கள் 14,26,779 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 3.05% ஆக உள்ளது. பாலின விகிதம் 107 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நபர்கள் 4308 வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 57.1% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
Remove ads
கல்வி
வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள்
நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் இருபது கல்லூரிகளும், பத்து மேனிலைப் பள்ளிகளும், 126 உயர்நிலைப் பள்ளிகளும், பதின்மூன்று இளையோர் உயர்நிலைப் பள்ளிகளும், 1425 தொடக்கப் பள்ளிகளும், ஐம்பத்தி நான்கு சமயக் கல்வி வழங்கும் மதராசாக்களும், ஒரு கடல்சார் பயிற்சி நிறுவனமும் உள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads