நாரா லோகேசு

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

நாரா லோகேசு
Remove ads

நாரா லோகேசு (Nara Lokesh) (பிறப்பு 23 ஜனவரி 1983) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நா. சந்திரபாபு நாயுடுவின் மகன் ஆவார். சட்டமேலவை உறுப்பினரான இவர் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும் பணியாற்றினார். [3] தேர்தலில் போட்டியிடாமல் தந்தை சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் அமைச்சரானதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். [4] [5] [6] எவ்வாறாயினும், எந்தத் தேர்தலிலும் போட்டியிடாததற்காக பெரும் விமர்சனங்களுக்குப் பிறகு, இவர் இறுதியாக மங்களகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 2019 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அல்லா ராமகிருஷ்ண ரெட்டியிடம் தோல்வியடைந்தார். [7] [8]

விரைவான உண்மைகள் நாரா லோகேசு, தெலுங்கு தேசம் கட்சி ...
Remove ads

அரசியல் பின்னணி

இவரும் இவரது தந்தையும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இருவரும் 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் அரசியல் பின்னடைவைச் சந்தித்தனர். [9] இது தெலுங்கு தேசம் கட்சியின் வரலாற்றில் இல்லாத மோசமான தோல்வியாகும். [10] [11] இவரது மேலவை உறுப்பினர் பதவிக்காலமும் சமீபத்தில் 29 மார்ச் 2023 அன்று முடிவடைந்தது [12]

Remove ads

ஊழல் குற்றச்சாட்டு

ஆந்திரப் பிரதேசத்தில் சாலை அமைப்பதில் ஊழல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணையில் உள்ளார். [13] இந்த வழக்கில் இவருடன் இவரது தந்தையும் சிக்கியுள்ளார். [14]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads