நா. காமராசன்

தமிழ்க் கவிஞர், பாடலாசிரியர், புதுக்கவிதையின் முன்னோடி From Wikipedia, the free encyclopedia

Remove ads

நா. காமராசன் (Na. Kamarasan, நவம்பர் 29, 1942 - மே 24, 2017) தமிழ்ப் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனக்கவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடும் காமராசன், "கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான்" என்றும் அழைக்கப்பட்டவர், "கலைஞர்" மு.கருணாநிதி வழியே அரசியலுக்கும், ம. கோ. இராமச்சந்திரன் வழியே திரைத்துறைக்கும் வந்தவர்.

"தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா. காமராசன்தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன்கூட மறந்துவிடக் கூடாது" என்று கவிஞர் வைரமுத்துவால் புகழப்பட்டவர்.
விரைவான உண்மைகள் கலைமாமணிநா. காமராசன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

1942-ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் தேனி மாவட்டத்தில் போடி மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்குப் பிறந்தார்.

கல்வி

மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்று கலை இளவர் (B.A.), கலை முதுவர் (M.A.) பட்டங்களைப் பெற்றார்.

பணி

அரசியல்

1964-ஆம் ஆண்டில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்தபொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு காலில் விலங்கு பூட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்.

முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருந்தார்.

1973ஆம் ஆண்டில் அ.தி.மு.க. தொடங்கப்பட்டபொழுது அரசுப்பணியைத் துறந்து, அக்கட்சியின் கொள்கைவிளக்கப் பேச்சாளராக மாறினார். பின்னர் அக்கட்சியில் மாநில மாணவரணிச் செயலாளர் (1990), மாநில இலக்கியஅணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்தார்.

1989ஆம் ஆண்டில் ம.கோ.இரா.வின் மறைவிற்குப்பின் அ.தி.மு.க. பல்வேறு அமைப்புகளாக உடைந்தபொழுது ஜெ.ஜெயலலிதாவின் அணியிலிருந்தார்.

Remove ads

பொறுப்பு

  • 1980களில் இறுதியில் தமிழ்நாடு கதர்கிராமத்தொழில் வாரியத் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 1991ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயலிசைநாடக மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

வெளியான நூல்கள்

கவிதைகள்

  1. கறுப்புமலர்கள்
  2. சூரியகாந்தி
  3. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்
  4. சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்
  5. மலையும் ஜீவநதிகளும்
  6. கவியரசு நா. காமராசன் கவிதைகள்
  7. மகாகாவியம்
  8. கிறுக்கல்
  9. சுதந்திர தினத்தில் ஒரு கைதியின் டைரி
  10. ஆப்பிள் கனவு
  11. அந்த வேப்பமரங்கள்
  12. பெரியார் காவியம்
  13. பட்டத்துயானை
  14. காட்டுக்குறத்தி
  15. சிகரத்தில் உறங்கும் நதிகள்
  16. பொம்மைப்பாடகி
  17. ஞானத்தேர்

கதைகள்

  1. நரகத்திலே சில தேவதைகள்

திறனாய்வு

  1. நாவல்பழம்

திரைத்துறையில்

எம்.ஜி.ஆரால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இவரது பாடல்கள் இடம்பெற்ற சில திரைப்படங்கள்

  1. பல்லாண்டு வாழ்க,
  2. நீதிக்குத் தலைவணங்கு,
  3. இதயக்கனி,
  4. இன்று போல் என்றும் வாழ்க,
  5. நவரத்தினம்,
  6. ஊருக்கு உழைப்பவன்,
  7. வெள்ளைரோஜா,
  8. கோழிகூவுது,
  9. நல்லவனுக்கு நல்லவன்,
  10. இதயகோயில்
  11. உதயகீதம்
  12. நான் பாடும் பாடல்
  13. பாடும் வானம்பாடி
  14. ரெட்டை வால் குருவி
  15. தங்கமகன்,
  16. அன்புள்ள ரஜினிகாந்த்,
  17. கை கொடுக்கும் கை,
  18. காக்கிச்சட்டை,
  19. காதல்பரிசு,
  20. முந்தானை முடிச்சு,
  21. வாழ்க வளர்க,
  22. பெரியவீட்டு பண்ணக்காரன்,
  23. எங்க ஊரு காவக்காரன்,
  24. அன்புக்கட்டளை.
  25. ஓசை
  26. ஆனந்த கண்ணீர்
  27. அந்த ஒரு நிமிடம்
  28. மந்திர புன்னகை
  29. உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
  30. மனிதனின் மறுபக்கம்
  31. ஒரு நல்லவன் ஒரு வல்லவன்
  32. கற்பகம் வந்தாச்சு
  33. ஊர்க்குருவி
  34. சொல்ல துடிக்குது மனசு
  35. நாளை உனது நாள்

வசனம் எழுதிய திரைப்படம்

  1. பஞ்சவர்ணம்
Remove ads

இதழாளர்

  • சோதனை [2]. கி.ராஜநாராயணை ஆலோசகராகக்கொண்டு வெளிவந்த இவ்விதழின் முதல் மலர் 1973 ஏப்ரல் திங்களிலும் இரண்டாம் மலர் மே திங்களிலும் வெளிவந்தன. மூன்றாம் இதழுக்கான படைப்புகள் திரட்டப்பட்டன, ஆனால் அவ்விதழ் வெளிவரவில்லை. இவ்விதழில் கவிஞர் விக்ரமாதித்யன் மெய்ப்புத்திருத்துதல் உட்பட பல்வேறு பணிகளைச் செய்தார்.[3]

குடும்பம்

இவர் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசித்த தா. பொம்மையன் மகள் லோகமணியை வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டவர். இவருக்குத் தைப்பாவை என்ற மகளும், தீலீபன் என்ற மகனும் உள்ளனர்.

சிறப்பு

  • இவர் பள்ளிப்பருவத்திலே பேச்சுப்போட்டியில் முதற்பரிசு பெற்றதற்காக இவரை யானைமீது அமரவைத்து ஊரைச் சுற்றிவந்து போடிநாயக்கனூர் மக்கள் பெருமைப்படுத்தினர்.
  • இவரது கவிதைத் தொகுப்புகள் சில, தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ்ப் புத்தகத்தில் பாடமாக உள்ளன.
  • இவரது கறுப்புமலர் புத்தகத்தில் திருநங்கைகள் பற்றி இவர் எழுதிய கவிதை பலரால் பாரட்டப்பெற்றது.

பெற்ற விருதுகள்

  1. கலைமாமணி விருது
  2. சிறந்த பாடலாசிரியர் விருது
  3. பாரதிதாசன் விருது

மறைவு

நா. காமராசன் உடல்நலக் குறைவால் 2017 மே 24 அன்று சென்னையில் காலமானார். இவரது கவிதைப் புத்தகங்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கி இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவரது மனைவி திருமதி லோகமணி காமராசனை கெளரவித்து சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது[4]

நாட்டுடைமையாக்கல்

இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. அதற்கான பரிவுத் தொகை 2020 சனவரி 20 அன்று வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads