விக்ரமாதித்யன்
திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விக்ரமாதித்யன் (பிறப்பு: செப்டம்பர் 25, 1947) ஒரு தமிழ்நாட்டுக் கவிஞர். இவரது இயற்பெயர் நம்பிராஜன். திருநெல்வேலி நகரப் பகுதியில் கல்லத்தி முடுக்கு தெருவில் வளர்ந்தவர். பின்னர் குற்றாலம், தென்காசி, சென்னை மேற்கு மாம்பலம், கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் ஆகிய இடங்களிலும் வாழ்ந்துள்ளார்.

கல்வி
- தொடக்கக்கல்வியை திருநெல்வேலியில் பெற்றார்.
- 5ஆம் வகுப்பு (இரண்டாம் முறை), 6ஆம் வகுப்புக் கல்வியை சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பெற்றார். [1]
- 7, 8, 9ஆம் வகுப்புக்கல்வியை கடலூர் மாவட்டம் மாதிரவேளூரிலுள்ள முத்துசாமி-விசுவநாதர் நடுநிலைப்பள்ளியில் (1962-63ஆம் கல்வியாண்டு முதல் 1964-65ஆம் கல்வியாண்டு முடிய) பெற்றார்.[1]
- 10, 11ஆம் வகுப்புக்கல்வியை அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் (தற்போதைய தெங்காசி மாவட்டம்) வாசுதேவநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் (கல்வியாண்டு 1965-66, 1966-67) பெற்றார்.[1]
- புகுமுகவகுப்புக் கல்வியை (Pre University Course) பாபநாசத்தில் உள்ள திருவள்ளுவர் கல்லூரியில் (கல்வியாண்டு 1967-68) பெற்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் க. ப. அறவாணன் ஆவார். [1]
- திருநெல்வேலி மேடைத்தளவாய் கூட்டுறவுப் பயிற்சிப் பள்ளியில் கூட்டுறவு மேற்பார்வையாளர் பயிற்சியைப் (1974-75ஆம் கல்வியாண்டு) பெற்றார்.[1]
Remove ads
தொழில்
- தெருவோடி விற்பனையாளர்(Hawker) - பகுதிநேரம் (1960 முதல் 1962 வரை)
- உணவகத்தில் மேசைதுடைத்தல்: திருச்சியிலிருந்த உணவகங்களில் - பள்ளி விடுமுறை நாள்களில் (1962 முதல் 1965 வரை)
- உணவகத்தில் உணவுபரிமாறல்: மேலூர் (1968), சென்னை (1969-1972)
- குன்றக்குடி ஆதினத்தில் உதவியாளர் (1969)
- குற்றாலம் பொருட்காட்சியில் நுழைவுச்சீட்டுவிற்றல் (1070)
- நா. காமராசன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட சோதனை (1973 ஏப்ரல், மே, சூன்), விசிட்டர் (1980), அஸ்வினி (1980) இதழ்களில் மெய்ப்புப்பார்த்தல்
- இதழ்களில் பங்களிப்பாளர் (1973 முதல்)
- துணையாசிரியர் உள்ளிட்ட மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன் இதழ்களில்.
Remove ads
குடும்பம்
1970ஆம் ஆண்டில் குற்றாலம் சிறீ பராசக்தி கல்லூரி கூட்டுறவுச் சங்கத்தில் வேலைபார்த்த பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஆண்மக்கள் (இளையவர் பெயர் சந்தோசு) உள்ளனர்.
படைப்புகள்
16 கவிதைத்தொகுப்புகளும் இரண்டு சிறுகதைத்தொகுப்புகளும் 7 கட்டுரைத்தொகுப்புகளும் இதுவரை வெளியாகியுள்ளன.
Remove ads
திரையில்
- தனுஷ்கோடி என்னும் குறும்படத்தில் நடித்தார். அது வெளியிடப்படவில்லை [1]
- நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைகாரர் வேடத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.
விருதுகள்
- 2008 ஆண்டிற்கான விளக்கு விருது [2]
- 2014 ஆம் ஆண்டிற்கான சாரல் விருது [3][4][5]
- 2021 ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது [6][7][8]
மேற்கோள்
இவர் எழுதிய புகழ் பெற்ற வரிகள்,
“ | விரும்பியது நதிக்கரை நாகரீகம்
விதிச்சது நகர நாகரீகம் |
” |
சான்றடைவு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads