நினைத்தாலே இனிக்கும் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நினைத்தாலே இனிக்கும் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 23 ஆகத்து 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது ஜீ வங்களா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மிதை' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரை என். பிரியன் என்பவர் இயக்க, சுவாதி சர்மா மற்றும் ஆனந்த் செல்வன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2]
Remove ads
கதை சுருக்கம்
இது பொம்மி என்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் இனிப்பு விற்பனையாளர், இவர் சித்தார்த் குடும்பத்திற்கு இனிப்புகளை விற்கச் செல்கிறார், காலப்போக்கில், அவர்களின் ஒரு குடும்ப உறுப்பினர் போல எப்படி பிணைக்கப்படுகிறார் என்பது தான் கதை.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads